03.03
– அடியும்
முடியும் -
(பொது)
2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
51) ஓடு
-----------
ஓடுநதி ஆடுமர வோடுபிறை சென்னிமிசை
சூடுமிறை கையினிலோர் ஓடு.
2009-02-19
52) தொக்கு
-------------------
தொக்குத் தொகுதொகு வென்றரன் ஆடமுழா
மிக்கிசைக்கும் பூதங்கள் தொக்கு.
2009-02-24
53) விண்டு
---------------
விண்டுரைக்க ஒண்ணாத மெய்ச்சுடரின் எல்லையினைக்
கண்டு விடமுயன்றார் விண்டு.
2009-02-26
54) போது
---------------
போதுபோக் காதுநெஞ்சே போற்றிப் புகழ்ந்துமறை
ஓதுசிவன் தாளிலிடு போது.
55) தலை
------------
தலைமேல் மதியும் அலைசேர் நதியும்
இலகும் இறையே தலை.
56) சிலை
------------
சிலையென்று சிந்தை மயங்குவார்க் கெட்டாத்
தலைவர்க்கு வெற்பே சிலை.
57) புகல்
------------
புகலான முக்கண்ணன் பொன்னடியை நாவே
மிகவேநீ போற்றிப் புகல்.
2009-02-28
58) அகல்
--------------
அகலாகச் சிந்தையை ஆக்கியன்பை ஏற்றும்
தகவிலார் தம்மை அகல்.
59) பொடி
--------------
பொடியணிந்த முக்கண்ணன் சேவடியைப் போற்றும்
அடியார் வினைஆம் பொடி
60) அறு
-----------
அறுமுகத்தன் தாதையை அன்பினால் போற்றிச்
செறுதீ வினையை அறு
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
51) ஓடு
-----------
ஓடுநதி ஆடுமர வோடுபிறை சென்னிமிசை
சூடுமிறை கையினிலோர் ஓடு.
பதம்
பிரித்து:
ஓடு
நதி,
ஆடும்
அரவோடு பிறை சென்னி மிசை
சூடும்
இறை கையினில் ஓர் ஓடு.
ஓடு
நதி -
ஓடுகின்ற
நதி (வினைத்தொகை)
- கங்கை;
ஆடும்
அரவு -
அசையும்
பாம்பு;
சென்னி
மிசை -
தலையின்
மேல்;
கையினில்
ஓர் ஓடு -
கையில்
பிரமனது மண்டை ஓடு.
2009-02-19
52) தொக்கு
-------------------
தொக்குத் தொகுதொகு வென்றரன் ஆடமுழா
மிக்கிசைக்கும் பூதங்கள் தொக்கு.
பதம்
பிரித்து:
தொக்குத்
தொகுதொகு என்று,
அரன்
ஆட,
முழா
மிக்கு
இசைக்கும் பூதங்கள் தொக்கு.
தொக்குத்
தொகுதொகு -
தாள
ஓசை ஒலிக்குறிப்பு;
முழா
-
முழவு
-
முரசு
போன்ற வாத்தியங்கள்;
பூதங்கள்
தொக்கு -
பூதகணங்கள்
எல்லாம் சேர்ந்து.
(தொகுதல்
-
கூடுதல்
-
To assemble, collect,
accumulate);
2009-02-24
53) விண்டு
---------------
விண்டுரைக்க ஒண்ணாத மெய்ச்சுடரின் எல்லையினைக்
கண்டு விடமுயன்றார் விண்டு.
விண்டு
-
1) சொல்லி;
2) விஷ்ணு;
விள்ளுதல்
-
சொல்லுதல்;
2009-02-26
54) போது
---------------
போதுபோக் காதுநெஞ்சே போற்றிப் புகழ்ந்துமறை
ஓதுசிவன் தாளிலிடு போது.
போது
-
1) பொழுது;
காலம்;
2) பூ;
55) தலை
------------
தலைமேல் மதியும் அலைசேர் நதியும்
இலகும் இறையே தலை.
தலை
-
1) சிரம்;
2) தலைவன்;
உயர்ந்தவன்;
முதல்;
இலகுதல்
-
விளங்குதல்
(To
shine, glisten, glitter);
இறை
-
இறைவன்;
56) சிலை
------------
சிலையென்று சிந்தை மயங்குவார்க் கெட்டாத்
தலைவர்க்கு வெற்பே சிலை.
சிலை
-
1) கல்லிற்
செதுக்கிய உருவம்;
2) வில்;
சிந்தை
மயங்குதல் -
அறிவின்
தெளிவின்மை;
வெற்பு
-
மலை;
*
திரிபுரங்களை
எரித்தபொழுது சிவன் ஒரு மலையை
வில்லாக ஏந்தினான்;
57) புகல்
------------
புகலான முக்கண்ணன் பொன்னடியை நாவே
மிகவேநீ போற்றிப் புகல்.
புகல்
-
1) சரண்;
2) சொல்;
கூறு;
2009-02-28
58) அகல்
--------------
அகலாகச் சிந்தையை ஆக்கியன்பை ஏற்றும்
தகவிலார் தம்மை அகல்.
அகல்
-
1) விளக்குத்
தகழி (Hollow
earthen lamp); 2) "நீங்கு"
என்ற
ஏவல் வினை;
(அகல்தல்
-
நீங்குதல்);
தகவு
இலார் -
குணம்
இல்லாதவர்கள்;
59) பொடி
--------------
பொடியணிந்த முக்கண்ணன் சேவடியைப் போற்றும்
அடியார் வினைஆம் பொடி
பொடி
-
திருநீறு;
சாம்பல்;
பொடியாதல்
-
அழிதல்;
60) அறு
-----------
அறுமுகத்தன் தாதையை அன்பினால் போற்றிச்
செறுதீ வினையை அறு
அறு
-
1) ஆறு;
2) அழி;
நீக்கு;
தாதை
-
தந்தை;
செறு
தீவினை -
நம்மை
வருத்துகின்ற தீய வினைகள்;
(செறுதல்
-
வருத்துதல்);
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
No comments:
Post a Comment