03.03
– அடியும்
முடியும் -
(பொது)
2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
11) பாடு
-------------
பாடு தவிர மனமே பதம்தூக்கி
ஆடும் அடிகளைப் பாடு.
12) நிலா
-------------
நிலாவாறு பாய்ந்து வரும்ஆற்றின் நீர்நின்
றுலாவும் சடைமேல் நிலா.
13) இரா
-------------
இராப்பகல் ஏத்தடியார் தீவினைகள் ஈசன்
அராப்புனைவான் நோக்கால் இரா.
14) இலை
--------------
இலையோ மலரோ இறைவனுக் கிட்டால்
நலம்பெறலாம்; துன்பம் இலை.
2009-01-20
15) இரு
-------------
இருகரம் கூப்பி இறைவனைப் போற்றி
ஒருகுறை இன்றி இரு.
16) கூறு
-------------
கூறு மலைமகள் கொண்டவனை, வெண்திரு
நீறு திகழ்பவனைக் கூறு.
17) அறை
--------------
அறைபுனல் சூடும் அரனார் பெயரை
மறவாது நாவே அறை.
18) சிறை
-------------
சிறைவண் டறைஓவாச் சிற்றம் பலத்தான்
பிறைச்சடைகங் கைக்குச் சிறை.
2009-01-22
19) கெடு
-------------
கெடுவதற்கே எண்ணுநெஞ்சே கேளறி வாயோ
அடுமெமனார் வைத்த கெடு.
20) படர்
-------------
படர்சடைமேல் பாம்பணிவான் பாதம் பணிந்தால்
அடையார் நமனார் படர்.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
11) பாடு
-------------
பாடு தவிர மனமே பதம்தூக்கி
ஆடும் அடிகளைப் பாடு.
பாடு
-
1) வருத்தம்/துன்பம்;
2) 'பாடு'
என்ற
ஏவல் வினை;
தவிர
-
நீங்க;
இல்லாமல்
போக;
அடிகள்
-
இறைவன்;
12) நிலா
-------------
நிலாவாறு பாய்ந்து வரும்ஆற்றின் நீர்நின்
றுலாவும் சடைமேல் நிலா.
பதம்
பிரித்து:
நிலாவாறு
பாய்ந்துவரும் ஆற்றின் நீர்
நின்று
உலாவும்
சடைமேல் நிலா.
நிலாவாறு
-
நில்லாதபடி;
நிலா - திங்கள்;
நிலா - திங்கள்;
13) இரா
-------------
இராப்பகல் ஏத்தடியார் தீவினைகள் ஈசன்
அராப்புனைவான் நோக்கால் இரா.
இரா
=
1) இரவு;
2) இருக்கமாட்டா
(ஒழியும்);
ஏத்து
அடியார் தீவினைகள் -
துதிக்கின்ற
அடியவர்களது பாவங்கள்;
அரா
-
பாம்பு;
14) இலை
--------------
இலையோ மலரோ இறைவனுக் கிட்டால்
நலம்பெறலாம்; துன்பம் இலை.
இலை
-
1) வில்வம்
முதலியன.
2) இல்லை.
2009-01-20
15) இரு
-------------
இருகரம் கூப்பி இறைவனைப் போற்றி
ஒருகுறை இன்றி இரு.
16) கூறு
-------------
கூறு மலைமகள் கொண்டவனை, வெண்திரு
நீறு திகழ்பவனைக் கூறு.
கூறு -
1) பாகம்;
2) "சொல்"
என்ற
ஏவல் வினை;
17) அறை
--------------
அறைபுனல் சூடும் அரனார் பெயரை
மறவாது நாவே அறை.
அறைதல்
-
1) ஒலித்தல்;
2) சொல்லுதல்
அறை
புனல் -
ஒலிக்கும்
நதி -
கங்கை;
18) சிறை
-------------
சிறைவண் டறைஓவாச் சிற்றம் பலத்தான்
பிறைச்சடைகங் கைக்குச் சிறை.
பதம்
பிரித்து:
சிறைவண்டு
அறை ஓவாச் சிற்றம்பலத்தான்
பிறைச்சடை
கங்கைக்குச் சிறை.
சிறை-
1) சிறகு;
2) அடைக்கும்
இடம்;
/ அணை;
அறைதல்
-
ஒலித்தல்;
(சம்பந்தர்
தேவாரம் -
1.80.4 - "நிறைவெண்
கொடிமாட ...
சிறைவண்
டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் ...")
2009-01-22
19) கெடு
-------------
கெடுவதற்கே எண்ணுநெஞ்சே கேளறி வாயோ
அடுமெமனார் வைத்த கெடு.
பதம்
பிரித்து:
கெடுவதற்கே
எண்ணும் நெஞ்சே கேள்;
அறிவாயோ
அடும்
எமனார் வைத்த கெடு?
அடுதல்
-
கொல்லுதல்;
கெடு
-
தவணை
(term,
fixed time, installment);
20) படர்
-------------
படர்சடைமேல் பாம்பணிவான் பாதம் பணிந்தால்
அடையார் நமனார் படர்.
படர்
-
1) படர்தல்
;
2) படைவீரர்;
ஏவல்செய்வோர்;
படர்சடை
-
படர்ந்த
சடை;
நமனார்
படர் -
எம
தூதர்;
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
No comments:
Post a Comment