03.03
– அடியும்
முடியும் -
(பொது)
2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
61) கொடு
--------------
கொடுவினையை மாய்க்கலாம்; கோபித்து வேளைச்
சுடுமிறைக்கு நெஞ்சைக் கொடு.
2009-03-01
62) உமை
--------------
உமையொரு பாகத் தொருவரெம் கோவென்
றிமையவரும் சொல்வார் உமை;
63) படை
--------------
படைத்துப் புரந்தொடுக்கும் சூலப் படையான்
அடியார்க் கமுது படை.
64) ஆற்று
--------------
ஆற்றுச் சடைமேல் அணிமதி சூடியைப்
போற்றி நிதம்திருத்தொண் டாற்று.
2009-03-17
65) நினை
--------------
நினையிரந்தேன் நெஞ்சே நிமிடஅள வேனும்
தினமும் சிவனை நினை.
66) கரை
------------
கரைசேர் வதற்குக் கருதினால் முக்கட்
பரனையெண்ணி நெஞ்சே கரை.
67) ஒன்று
--------------
"ஒன்றாய், இரண்டாய், உளதெல்லாம் ஆனவனே"
என்றென்றே ஏத்திநெஞ்சே ஒன்று.
2009-03-27
68) நகர்
------------
நகரரவம் பூண்டான் நகைசெய் தெரித்தான்
இகலியார் மூன்று நகர்.
69) கோள்
----------------
கோளரவும் ஆறும் குளிர்நிலவும் சூடினான்
தாளடைந்தால் நன்றுசெய்யும் கோள்.
70) பரவு
--------------
பரவும் சடைமேல் பனிநிலாச் சூடும்
பரமனைப் பாடிப் பரவு.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
61) கொடு
--------------
கொடுவினையை மாய்க்கலாம்; கோபித்து வேளைச்
சுடுமிறைக்கு நெஞ்சைக் கொடு.
கொடு
வினை -
கொடிய
வினை;
கொடுத்தல்
-
அளித்தல்;
வேள்
-
மன்மதன்;
2009-03-01
62) உமை
--------------
உமையொரு பாகத் தொருவரெம் கோவென்
றிமையவரும் சொல்வார் உமை;
பதம்
பிரித்து:
"உமை
ஒரு பாகத்து ஒருவர்;
எம்
கோ"
என்று
இமையவரும்
சொல்வார் உமை;
உமை
-
1) உமாதேவி;
பார்வதி;
2) உம்மை;
ஒருவர்
-
ஒப்பற்றவர்;
கோ
-
தலைவன்;
அரசன்;
இமையவர்
-
தேவர்கள்;
63) படை
--------------
படைத்துப் புரந்தொடுக்கும் சூலப் படையான்
அடியார்க் கமுது படை.
பதம்
பிரித்து:
படைத்துப்
புரந்து ஒடுக்கும் சூலப்
படையான்
அடியார்க்கு
அமுது படை.
படைத்தல்
-
1) சிருஷ்டித்தல்;
2) பரிமாறுதல்
(To
serve or distribute, as food to guests);
புரந்து
-
காத்து;
(புரத்தல்
-
காத்தல்);
சூலப்படையான்
-
சூலாயுதன்;
(படை
-
ஆயுதம்);
அமுது
-
சோறு;
உணவு;
64) ஆற்று
--------------
ஆற்றுச் சடைமேல் அணிமதி சூடியைப்
போற்றி நிதம்திருத்தொண் டாற்று.
ஆற்றுச் சடை - கங்கையைத் தரித்த சடை; அணி மதி சூடி - அழகிய பிறைச்சந்திரனைச் சூடியவன்; நிதம் - தினமும்; திருத்தொண்டு ஆற்று - திருப்பணி செய்;
2009-03-17
65) நினை
--------------
நினையிரந்தேன் நெஞ்சே நிமிடஅள வேனும்
தினமும் சிவனை நினை.
நினை
-
1) நின்னை
(உன்னை);
2) எண்ணு;
இரத்தல்
-
யாசித்தல்;
வேண்டுதல்;
நிமிடம்
-
கண்ணிமைப்பொழுது;
66) கரை
------------
கரைசேர் வதற்குக் கருதினால் முக்கட்
பரனையெண்ணி நெஞ்சே கரை.
கரை
சேர்தல் -
பிறவிப்பெருங்கடலைக்
கடத்தல்;
முக்கட்
பரன் -
முக்கண்
உடைய பரமன் -
சிவன்;
கரைதல்
-
உருகுதல்;
அழுதல்;
சொல்லுதல்;
ஒலித்தல்;
67) ஒன்று
--------------
"ஒன்றாய், இரண்டாய், உளதெல்லாம் ஆனவனே"
என்றென்றே ஏத்திநெஞ்சே ஒன்று.
ஒன்று
ஆய் -
ஒன்று
ஆகி;
- ஏகன்
ஆகி;
ஏத்தி
-
துதித்து;
ஒன்றுதல்
-
ஒருமுகப்படுதல்
(To
set one's mind solely on an object);
2009-03-27
68) நகர்
------------
நகரரவம் பூண்டான் நகைசெய் தெரித்தான்
இகலியார் மூன்று நகர்.
நகர்
அரவம் பூண்டான் -
ஊரும்
பாம்பை அணிந்தவன்;
நகைசெய்து
எரித்தான் -
சிரித்து
எரித்தான்;
இகலியார்
-
பகைவர்;
69) கோள்
----------------
கோளரவும் ஆறும் குளிர்நிலவும் சூடினான்
தாளடைந்தால் நன்றுசெய்யும் கோள்.
கோள்
அரவு -
கொலைத்
தொழிலையுடைய பாம்பு;
கோள்
-
கிரகம்;
70) பரவு
--------------
பரவும் சடைமேல் பனிநிலாச் சூடும்
பரமனைப் பாடிப் பரவு.
பரவுதல்
-
1) பரந்திருத்தல்;
2) புகழ்தல்;
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
No comments:
Post a Comment