03.03
– அடியும்
முடியும் -
(பொது)
2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
31) பழம்
------------
பழம்பொரு ளாய்ப்புதுமை ஆனமுக் கண்ணன்
கழல்கற் பகத்தின் பழம்.
32) பிடி
------------
பிடிநடையாள் ஓர்கூ றுடைய பெருமான்
அடியிணையை நன்கு பிடி.
33) படி
-----------
படியீவான் பால்மதியன் பஞ்சக்கா லத்தில்
அடியார் மகிழும் படி.
34) அடை
--------------
அடைதோசை இட்டலிக் காகவே வாழா
திடைமருதன் தாளை அடை.
35) விடை
---------------
விடையேறும் ஈசனை வேண்டினால் ஈவான்
அடைந்தார்க்கு நல்ல விடை.
36) அசைத்தல்
---------------
அசைத்தான் அரவை; அரக்கன் தனைச்செற்
றிசைகேட்டான் சென்னி அசைத்து.
37) ஊர்
------------
ஊர்விடை யான்சுட்டான் ஓரம்பால் எவ்விடமும்
பேர்கின்ற மூவரின் ஊர்.
38) உண்டு
---------------
உண்டுண் டுடல்வளர்க்க ஓடுநெஞ்சே; கார்சேரும்
கண்டனைச் சிந்தி;உய் வுண்டு.
39) நீர்
-----------
நீர்பாயும் செஞ்சடை நின்மலனைப் போற்றிவினை
தீர்ந்துய் வடையலாம் நீர்.
40) வாள்
-------------
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
31) பழம்
------------
பழம்பொரு ளாய்ப்புதுமை ஆனமுக் கண்ணன்
கழல்கற் பகத்தின் பழம்.
பழம்
-
1) பழைய;
2) கனி;
பழம்பொருள்
ஆய்ப் புதுமை ஆன முக்கண்ணன்
-
மிகத்
தொன்மையானவன்;
என்றும்
புதியவன்;
கழல்
கற்பகத்தின் பழம் -
அப்பெருமான்
திருவடி கற்பகக்கனியை ஒக்கும்;
32) பிடி
------------
பிடிநடையாள் ஓர்கூ றுடைய பெருமான்
அடியிணையை நன்கு பிடி.
பிடி-
பெண்யானை;
பிடிநடையாள்
ஓர் கூறு உடைய பெருமான் -
பெண்
யானையைப் போன்ற நடையை உடைய
உமாதேவியை ஒரு பங்காக உடைய
சிவபெருமான்;
பிடித்தல்
-
பற்றிக்கொள்ளுதல்;
33) படி
-----------
படியீவான் பால்மதியன் பஞ்சக்கா லத்தில்
அடியார் மகிழும் படி.
படி-
1) தினசரிச்செலவுக்காகக்
கொடுக்கும் பொருள்;
2) விதம்;
படி
ஈந்த வரலாறு -
1) அப்பருக்கும்,
சம்பந்தருக்கும்
திருவீழிமிழலையில் படிக்காசு
அருளியது;
2) புகழ்த்துணை
நாயனாருக்குப் படிக்காசு
அருளியது;
34) அடை
--------------
அடைதோசை இட்டலிக் காகவே வாழா
திடைமருதன் தாளை அடை.
அடை
-
1) சிற்றுண்டி
வகைகளில் ஒன்று; 2) அடைதல்
-
சேர்தல்;
இடைமருதன்
-
திருவிடைமருதூர்ச்
சிவன்;
35) விடை
---------------
விடையேறும் ஈசனை வேண்டினால் ஈவான்
அடைந்தார்க்கு நல்ல விடை.
விடை
-
1) இடபம்
(எருது);
2) பதில்
(உத்தரம்);
அடைந்தார்க்கு
-
ஈசனைச்
சரணடைந்தவர்களுக்கு;
36) அசைத்தல்
---------------
அசைத்தான் அரவை; அரக்கன் தனைச்செற்
றிசைகேட்டான் சென்னி அசைத்து.
பதம்
பிரித்து:
அசைத்தான்
அரவை;
அரக்கன்
தனைச் செற்று
இசை
கேட்டான்,
சென்னி
அசைத்து.
அசைத்தல்
-
1) கட்டுதல்;
2) ஆட்டுதல்;
செறுதல்
-
வருத்துதல்;
வெல்லுதல்;
அழித்தல்;
சென்னி
-
தலை;
அசைத்தான்
அரவை;
- பாம்பை
அரையில் நாணாகக் கட்டிய
பெருமான்;
அரக்கன்
தனைச் செற்று இசை கேட்டான்,
சென்னி
அசைத்து -
இராவணனை
நசுக்கிப்,
பின்
அவன் பாடிய இசையைக் கேட்டு
மகிழ்ந்தான்;
37) ஊர்
------------
ஊர்விடை யான்சுட்டான் ஓரம்பால் எவ்விடமும்
பேர்கின்ற மூவரின் ஊர்.
ஊர்
விடையான் -
ஊர்கின்ற
விடையை உடையவன் -
இடப
வாகனன் -
சிவன்;
பேர்தல்
-
செல்லுதல்;
ஊர்
-
புரம்;
38) உண்டு
---------------
உண்டுண் டுடல்வளர்க்க ஓடுநெஞ்சே; கார்சேரும்
கண்டனைச் சிந்தி;உய் வுண்டு.
பதம்
பிரித்து:
உண்டு
உண்டு உடல் வளர்க்க ஓடும்
நெஞ்சே;
கார்
சேரும்
கண்டனைச்
சிந்தி;
உய்வு
உண்டு.
உண்டு
-
1) சாப்பிட்டு;
2) உள்ளது;
கிடைக்கும்;
ஓடுநெஞ்சே
-
ஓடும் நெஞ்சமே;
கார்
சேரும் கண்டன் -
கருமை
பொருந்திய மிடற்றை உடையவன்
-
நீலகண்டன்;
39) நீர்
-----------
நீர்பாயும் செஞ்சடை நின்மலனைப் போற்றிவினை
தீர்ந்துய் வடையலாம் நீர்.
பதம்
பிரித்து:
நீர்
பாயும் செஞ்சடை நின்மலனைப்
போற்றி,
வினை
தீர்ந்து,
உய்வு
அடையலாம் நீர்.
நீர்
-
1) கங்கை;
2) நீங்கள்;
40) வாள்
-------------
வாளரவம் சூடி வருமண்ணல் நீறணியெண்
தோளன்கை யில்மழு வாள்.
பதம் பிரித்து:
வாள்-அரவம் சூடி வரும் அண்ணல், நீறு அணி எண்
தோளன் கையில் மழு-வாள்.
வாள் - 1) ஒளி; கொடுமை; 2) வாள் என்ற ஆயுதம்;
தோள் - புஜம்;
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
No comments:
Post a Comment