03.03
– அடியும்
முடியும் -
(பொது)
2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
91) உடை
--------------
உடைதலையில் உண்பலி ஏற்கின்ற முக்கட்
கடவுளுக்குத் தோலே உடை.
2009-06-22
92) செல்
--------------
செல்லரித்த ஏடாகித் தேகம் விழுமுன்னே
தில்லைச்சிற் றம்பலம் செல்.
93) நேர்
-----------
நேர்வழிச் செல்லாத நீசருக் கெட்டாத
வார்சடையா னுக்குண்டோ நேர்!
94) பார்
-----------
பார்வணங்கும் முக்கட் பரன்புரியும் ஆடலைச்
சீர்மிகுசிற் றம்பலம்போய்ப் பார்.
95) ஆர்
-----------
ஆரமுதாய் அன்பர்க்குத் தித்திக்கும் ஐயனுக்குக்
காரடை கண்டற்கொப் பார்?
96) பலி (updated 2015-03-16)
------------
பலியிடம் யாசித்தான் பன்றியாய்த் தேடு
புலியதளற் கோட்டிற் பலி.
97) கலி
------------
கலிமதுரை ஆலவாய் கண்டு தொழுதால்
நலியாதே நம்மைக் கலி.
98) மாடு (updated 2015-01-20)
-------
மாடுவரு கூற்றுதைத்து மாணிக் கருளரன்சீர்
பாடுமடி யார்க்குவரும் மாடு.
99) காய்
------------
காய்விடம்உண் கண்டனைப் போற்றார் கனியிருப்பப்
போய்க்கவர்வார் கைக்கின்ற காய்.
100) பற்று
--------------
பற்றுவிட வேண்டினெஞ்சே பால்வெண் மதிசூடும்
கொற்றவன் தாளிணையைப் பற்று.
101) கேள்
---------------
102) புகார்
---------------
புகார்ச்சாய்க்காட் டீசனன்பர் போற்றியுய்வர்; நெஞ்சு
நெகார்போல் கருப்பைப் புகார்.
2009-07-01
103) தாழ்
--------------
தாழ்அப்பர் தண்தமிழ்கேட் டீசன் திறந்தான்காச்
சூழ்அம் மறைக்காட்டில் தாழ்.
2009-07-02
104) கரு
-----------
கருநஞ்சை உண்டமுக் கண்ணனைப் போற்றி
இருபுகாய் இன்னோர் கரு.
2009-07-02
105) விடாய்
-----------------
விடாய்மிகும் நெஞ்சுதந்து, வேணியனே, கேடு
படாஉன்தாள் எண்ண விடாய்.
106) கா
-------------
காவினைசெய் ஈசனுக்குக் கைவினை செய்துவளர்,
பூவினை நல்குகிற கா.
107) தீ
-----------
தீவினையைத் தீர்க்கும் சிவனார் கரத்திலும்
தீநெற்றிக் கண்ணிலும் தீ.
108) போர்
---------------
போர்விடையான் பொற்றாள் தொழநீறாம் ஈசனருட்
பார்வையினால் நம்பாவப் போர்.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
2009-01-01 - 2009-07-02
அடியும் முடியும்
--------------------------------------
(108 குறள்வெண்பாக்கள்)
91) உடை
--------------
உடைதலையில் உண்பலி ஏற்கின்ற முக்கட்
கடவுளுக்குத் தோலே உடை.
உடைதலை
-
உடைந்த
கபாலம்;
முக்கட்
கடவுள் -
முக்கண்ணன்
ஆகிய சிவன்;
தோலே
உடை -
தோலே
ஆடை ஆகும்;
2009-06-22
92) செல்
--------------
செல்லரித்த ஏடாகித் தேகம் விழுமுன்னே
தில்லைச்சிற் றம்பலம் செல்.
செல்
-
1) கறையான்;
2) போ;
93) நேர்
-----------
நேர்வழிச் செல்லாத நீசருக் கெட்டாத
வார்சடையா னுக்குண்டோ நேர்!
பதம்
பிரித்து:
நேர்வழிச்
செல்லாத நீசருக்கு எட்டாத
வார்சடையானுக்கு
உண்டோ நேர்!
நேர்
வழி -
சரியான
பாதை;
வார்
சடையான் -
நீண்ட
சடையை உடைய சிவன்;
உண்டோ
நேர் -
இணை
உண்டா?
(நேர்
-
ஒப்பு);
94) பார்
-----------
பார்வணங்கும் முக்கட் பரன்புரியும் ஆடலைச்
சீர்மிகுசிற் றம்பலம்போய்ப் பார்.
பார்
-
1) உலகத்தவர்கள்;
2) காண்;
முக்கட்
பரன் -
முக்கண்
உடைய பரம்பொருளான சிவபெருமான்;
சீர்
-
செல்வம்;
நன்மை;
அழகு;
95) ஆர்
-----------
ஆரமுதாய் அன்பர்க்குத் தித்திக்கும் ஐயனுக்குக்
காரடை கண்டற்கொப் பார்?
பதம்
பிரித்து:
ஆரமுது
ஆய் அன்பர்க்குத் தித்திக்கும்
ஐயனுக்குக்,
கார்
அடை கண்டற்கு ஒப்பு ஆர்?
ஆர்
-
1) அரிய;
2) யார்;
ஆரமுதாய்
-
ஆர்
அமுது ஆய் -
அரிய
அமுது ஆகி;
கார்
அடை கண்டற்கு -
கருமை
அடைந்த கழுத்தை உடையவனுக்கு;
(கண்டற்கு
-
கண்டன்
+
கு
-
கண்டனுக்கு);
ஒப்பு
ஆர் -
யார்
சமம்?
96) பலி (updated 2015-03-16)
------------
பலியிடம் யாசித்தான் பன்றியாய்த் தேடு
புலியதளற் கோட்டிற் பலி.
பதம்
பிரித்து:
பலியிடம்
யாசித்தான் பன்றி ஆய்த் தேடு
புலி
அதளற்கு ஓட்டில் பலி.
பலி
-
1) மஹாபலி
சக்கரவர்த்தி;
2) பிச்சை;
பலியிடம்
யாசித்தான் பன்றி ஆய்த் தேடு
-
மஹாபலியிடம்
சென்று மண் இரந்த திருமால்
பன்றி ஆகித் தேடிய;
புலியதளற்கு
-
புலி+அதளன்+கு
-
புலித்தோல்
அணிந்த சிவபெருமானுக்கு;
(அதள்
-
தோல்);
(அப்பர்
தேவாரம் -
4.80.2 - "பொருவிடை
யொன்றுடைப் புண்ணிய மூர்த்தி
புலியதளன்");
ஓட்டில்
பலி -
பிரமனது
மண்டையோட்டில் பிச்சை;
97) கலி
------------
கலிமதுரை ஆலவாய் கண்டு தொழுதால்
நலியாதே நம்மைக் கலி.
கலி
-
1) ஒலி;
ஆரவாரம்;
2) துன்பம்;
தரித்திரம்;
மதுரை
ஆலவாய் -
இருபெயரொட்டுப்
பண்புத்தொகை;
(3.108.11 - "கூட
லாலவாய்க் கோனை விடைகொண்டு"
- கூடல்
ஆலவாய் -
இரு
பெயரொட்டுப் பண்புத் தொகை);
நலியாது
-
துன்புறுத்தாது;
வருத்தாது;
98) மாடு (updated 2015-01-20)
-------
மாடுவரு கூற்றுதைத்து மாணிக் கருளரன்சீர்
பாடுமடி யார்க்குவரும் மாடு.
பதம்
பிரித்து:
மாடு
வரு-கூற்று
உதைத்து மாணிக்கு அருள் அரன்
சீர்
பாடும்
அடியார்க்கு வரும் மாடு.
மாடு
-
1) பக்கம்;
அருகு;
2) செல்வம்;
கூற்று
-
யமன்;
மாணி
-
மார்க்கண்டேயர்;
சீர்
-
புகழ்;
99) காய்
------------
காய்விடம்உண் கண்டனைப் போற்றார் கனியிருப்பப்
போய்க்கவர்வார் கைக்கின்ற காய்.
காய்
விடம் -
எரிக்கும்/அழிக்கும்
ஆலகால விஷம்;
(காய்தல்
-
எரித்தல்/அழித்தல்);
கைக்கின்ற
காய் -
கசக்கின்ற
காய்;
100) பற்று
--------------
பற்றுவிட வேண்டினெஞ்சே பால்வெண் மதிசூடும்
கொற்றவன் தாளிணையைப் பற்று.
பதம்
பிரித்து:
பற்று
விடவேண்டில் நெஞ்சே,
பால்
வெண் மதி சூடும்
கொற்றவன்
தாள் இணையைப் பற்று.
பற்று
-
1) அபிமானம்
(attachment);
2) பிடி
(to
grasp; to hold);
பால்
வெண்மதி -
பால்போலும்
வெண்ணிறத்தை உடைய திங்கள்;
கொற்றவன்
-
அரசன்;
தாள்
இணை -
இரு
திருவடிகள்;
101) கேள்
---------------
கேளிது நெஞ்சமே கீற்றுமதி சூடிஎண்
தோளிறையை அன்றியுண்டோ கேள்?
பதம்
பிரித்து:
கேள் இது, நெஞ்சமே; கீற்று-மதி சூடி, எண்-
தோள் இறையை அன்றி உண்டோ கேள்?
கேள் - 1) செவியால் கேட்பது; 2) உறவு; இறை - இறைவன்;
102) புகார்
---------------
புகார்ச்சாய்க்காட் டீசனன்பர் போற்றியுய்வர்; நெஞ்சு
நெகார்போல் கருப்பைப் புகார்.
பதம்
பிரித்து:
புகார்ச்
சாய்க்காட்டு ஈசன் அன்பர்
போற்றி உய்வர்;
நெஞ்சு
நெகார்போல்
கருப்பைப் புகார்.
புகார்
-
1) காவிரிப்பூம்
பட்டினம் என்ற ஊர்;
2) புகமாட்டார்;
சாய்க்காடு
-
பூம்புகார்
நகரில் உள்ள திருச்சாய்க்காடு
என்ற தலம்;
நெஞ்சு
நெகார் -
மனம்
உருகாதவர்;
(நெகுதல்
-
இளகுதல்;
உருகுதல்;
கரைதல்)
கருப்பைப்
புகுதல் -
கர்ப்பப்பையில்
புகுதல் -
மீண்டும்
பிறவி அடைதல்;
(சம்பந்தர்
தேவாரம் -
2.41.1 - "மண்புகார்
வான்புகுவர் ...
தண்புகார்ச்
சாய்க்காட்டெந் தலைவன்றாள்
சார்ந்தாரே")
திருவாசகம்
-
அச்சப்
பத்து -
7 - "தகைவிலாப்
பழியும் அஞ்சேன் ....
அகம்நெகா
தவரைக் கண்டால் அம்மநாம்
அஞ்சு மாறே")
2009-07-01
103) தாழ்
--------------
தாழ்அப்பர் தண்தமிழ்கேட் டீசன் திறந்தான்காச்
சூழ்அம் மறைக்காட்டில் தாழ்.
பதம்
பிரித்து:
தாழ்
அப்பர் தண்தமிழ் கேட்டு ஈசன்
திறந்தான் காச்
சூழ்
அம் மறைக்காட்டில் தாழ்.
*
திருமறைக்காட்டில்
மறைக்கதவம் தாழ் திறக்க
வேண்டித் திருநாவுக்கரசர்
பாடியதைச் சுட்டியது.
தாழ்
-
1) தாழ்தல்
-
வணங்குதல்;
2) தாழ்ப்பாள்;
அப்பர்
-
திருநாவுக்கரசர்;
தண்
தமிழ் -
குளிர்ந்த
தமிழாகிய தேவாரம்;
கா
-
சோலை;
அம்
-
அழகு;
காச்
சூழ் அம் மறைக்காடு -
சோலைகள்
சூழ்ந்த அழகிய வேதாரண்யம்;
(இலக்கணக்
குறிப்பு -
ஓரெழுத்துச்
சொல் பின் வல்லொற்று மிகும்)
2009-07-02
104) கரு
-----------
கருநஞ்சை உண்டமுக் கண்ணனைப் போற்றி
இருபுகாய் இன்னோர் கரு.
கரு
-
1) கரிய;
2) கருப்பம்;
பிறவி;
முக்கண்ணனைப்
போற்றி இரு -
சிவபெருமானை
வணங்கி வாழ்;
புகாய்
இன்னோர் கரு -
இனி
ஒரு பிறவியில் புக மாட்டாய்;
2009-07-02
105) விடாய்
-----------------
விடாய்மிகும் நெஞ்சுதந்து, வேணியனே, கேடு
படாஉன்தாள் எண்ண விடாய்.
விடாய்
-
1) தாகம்;
ஆசை;
2) விடமாட்டாய்;
வேணியன்
-
சடையினன்;
கேடுபடா
-
அழிவற்ற;
(அப்பர்
தேவாரம் -
4.112.4 - "நின்னையெப்
போது நினையவொட் டாய்நீ..."
- இறைவனே!
உன்னை
எப்போதும் நினைத்திருக்குமாறு
செய்ய நீ இசைகின்றாய் அல்லை.)
(திருவாசகம்
-
திருக்கோத்தும்பி
-
8.10.7 - "சட்டோ
நினைக்க மனத்தமுதாம் சங்கரனைக்
கெட்டேன்
மறப்பேனோ கேடுபடாத் திருவடியை...")
106) கா
-------------
காவினைசெய் ஈசனுக்குக் கைவினை செய்துவளர்,
பூவினை நல்குகிற கா.
கா
-
1) காத்தல்;
(Preservation, protection; பாதுகாப்பு);
2) நந்தவனம்;
சோலை;
கா
வினை செய் ஈசனுக்கு -
காக்கும்
தொழிலைச் செய்யும் சிவபெருமானுக்கு;
கைவினை
செய்து -
கிரியைகளாகிய
சிவப்பணிகளைச் செய்து;
வளர்
பூவினை நல்குகிற கா -
மலர்களை
அளிக்கும் நந்தவனத்தை
வளர்ப்பாயாக;
(சம்பந்தர்
தேவாரம் -
1.116.2: "காவினை
இட்டும் குளம்பல தொட்டும்
கனிமனத்தால்...."
- நந்தவனம்
சோலை முதலியவற்றை வளர்த்தும்
குளங்கள் பல தோண்டியும்
நல்லறங்கள் பலவற்றைச் செய்து,
கனிந்த
மனத்தோடு ....)
107) தீ
-----------
தீவினையைத் தீர்க்கும் சிவனார் கரத்திலும்
தீநெற்றிக் கண்ணிலும் தீ.
தீ
-
1) தீமை;
(தீ
வினை -
பாவம்);
2) நெருப்பு;
108) போர்
---------------
போர்விடையான் பொற்றாள் தொழநீறாம் ஈசனருட்
பார்வையினால் நம்பாவப் போர்.
பதம்
பிரித்து:
போர்விடையான்
பொற்றாள் தொழ,
நீறு
ஆம்,
ஈசன்
அருட்
பார்வையினால்,
நம்
பாவப் போர்.
போர்
-
1) சண்டை
(battle;
war); 2) குவியல்
(Heap;
accumulation);
போர்விடை
-
போர்செய்யும்
தன்மையுடைய இடபம்;
வீரம்
மிகுந்த எருது;
நீறாம்
-
நீறு
ஆம் -
சாம்பல்
ஆகும்;
(திருவாசகம்
-
திருப்பூவல்லி
-
8.13.16 - "திண்போர்
விடையான்");
(அப்பர்
தேவாரம் -
5.47.7 - "மூக்கு
வாய்செவி ...
ஆப்பை
அவிழ்த்து அருள் நோக்குவான்...")
அன்போடு,
வி. சுப்பிரமணியன்