06.04.011 – திருநாவுக்கரசர் துதி - இருள் நீங்க
2010-05-08
6.4.11) திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2010 (May 7/8)
----------------------------------
1) --- (வஞ்சி விருத்தம் - காய் மா மா - வாய்பாடு) ---
இருள்நீங்க, இருளால் விளையும்
மருள்நீங்க, மதியார் சடையன்
அருள்ஓங்க, மறவேல் மனமே
திருநாவுக் கரசர் கழலே.
இருள் - அறியாமை; ஆணவம்;
மருள் - மயக்கம்;
மதி ஆர் சடையன் - திங்களைச் சடைமேல் அணிந்த பெருமான்;
மறவேல் - மறவாதே;
கழல் - திருவடி;
2) --- (நேரிசை வெண்பா) ---
வினைக்கடலில் மூழ்க விரையும்கல் நெஞ்சே,
தினைத்தனையும் தேவாரம் செப்பு; - கனக்கின்ற
கல்லும் மிதக்கக் கரையடைந்த நாவரசர்
சொல்லும் அடியும் துணை.
தினைத்தனையும் - தினை அளவாவது - சிறிது அளவேனும்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment