சிவன் பாமாலை - பதிகம், திருப்புகழ், சிலேடை - by - வி. சுப்பிரமணியன்
Devotional Tamil Poetry on Siva - Padhigams by V. Subramanian
"சிவசிவ என்றிடத் தீவினை மாளும்"
வேளை
- 1. மன்மதனை;
2. முருகனை;
3. காலம்/சமயம்/பொழுது;
ஒரு
- 1. ஒப்பற்ற;
2. ஒன்று
வேலை
- 1. முருகன்
கையில் உள்ள ஆயுதம் ஆன வேலை;
2. தொழில்/செயல்;
வேளை
எரிக்க விழித்தான் மகன்-
மன்மதனை
நெற்றிக்கண்ணால் எரித்த
சிவனாரின் மகன் ஆன;
முருகவேளை
வணங்கிட வேண்டுமோ வேளை-
முருகப்
பெருமானைத் தொழுவதற்குத்
தனியாக ஒரு நேரம் வேண்டுமோ?
ஒரு
வேலை ஏந்தி, வருவோன்
தாள் போற்றும் ஒரு வேலை
செய்வார்க்கு உண்டு உய்வு- ஒப்பற்ற
வேலாயுதத்தைக் கையில் தாங்கி
வருகின்ற முருகனுடைய திருவடியைத்
தொழுகின்ற அந்த ஒரு செயலைச்
செய்பவர்களுக்கு நற்கதி
உண்டு.
.. .. மலர்ப்ப
தங்களை நினைபவர் கதிபெறல்
.. எளிதாமே.
பதம்
பிரித்து:
பசித்து
வந்தவர் உண ஒரு கறி இலை
.. .. .. எனப்,
பரிந்து
அவர் இலைதனில் ஒரு கனி
.. .. படைத்து
உவந்தவர்; பிறகு
உண வரும் அவர் .. மணவாளன்
.. "பழத்தை
இங்கு இட" என,
உள
ஒரு கனி
.. .. .. கலத்தில்
அன்பினொடு இட, உணும்
அவன் அவர்
.. ..
பதைத்திடும்படி,
"இனும்
ஒரு கனியையும் இடுவாய் நான்
புசிக்க"
என்றிட,
அவர்
அரன் அடிதொழுது
.. .. .. இரக்க,
அங்கு
ஒரு கனி வர, மறு-கனி
.. .. புசித்தவன்,
"கழறு,
இருகனி
இருசுவை வரும் ஆறு
.. புலப்படும்படி"
என,
அவர்
அரன் அருள்-
.. .. .. தனைப்
பகர்ந்திட, அவன்
அறி-வணம்
ஒரு
.. .. புதுப்பழம்
கரம் வர, அவன்
வெருவொடு .. பிரிவானே;
"நசிக்க
ஒன்பது துளை உடல் அழகு;
ஒரு
.. .. .. கணத்து
உடம்பதுதனை இவண் அருள்"
என
.. .. நயக்கும்
அன்பரது உளம் மகிழ் உரு இறை
.. தருவானே;
.. நரிக்குலம்
திரி சுடலையில் நடமிடு
.. .. ..
நிருத்தன்
அங்கழல்-இணை
தொழும் அடியவர்,
.. .. நரர்க்கு
இடும்பைகள் அற, இரு
பதிகமும் .. மொழிவாரே;
வசிட்டர்
அந்தரர் அயன் அரி தொழு-பதி
.. .. ..
மலைத்தடந்தனில்
அடி இட வெருவிய
.. .. மனத்தர்
தம் தலை-நடைகொடு
கயிலையை .. அடைவாரே;
.. மலைக்கு
மங்கையும் வினவிட,
"அனை
இவர்
.. .. .. நமக்கு"
எனும்
சொலை அரன் உரை-செயும்
அவர்
.. ..
மலர்ப்பதங்களை
நினைபவர் கதிபெறல் ..
எளிதாமே.
பசித்து
வந்தவர்உண ஒரு
கறி இலை எனப்,
பரிந்து
அவர் இலைதனில் ஒரு கனி
படைத்து உவந்தவர்-
(காலையில்)
பசியோடு
வந்த ஓர் அடியவர்க்கு
உணவிடும்பொழுது, கறி
இன்னும் சமைக்கப்பட்டிராத
காரணத்தால், அன்போடு
அவர் இலையில் (கணவன்
கொடுத்தனுப்பியிருந்த இரு
மாம்பழங்களில்) ஒரு
மாம்பழத்தை இட்டு மகிழ்ந்தவர்;
பிறகு
உண வரும் அவர்
மணவாளன், "பழத்தை
இங்கு இட"என,
உள
ஒரு கனி கலத்தில் அன்பினொடு
இட, உணும்
அவன்- பின்னர்ப்
பகலில் உண்ண வந்த அவர் கணவன்
"பழத்தை
இங்கே இடுக" என்று
சொல்ல, இருந்த
ஒரு பழத்தை இலையில் அன்போடு
இட, உண்ட
அவன்; (இட
– இடுக என்ற வியங்கோள்);
அவர்
பதைத்திடும்படி,
"இனும்
ஒரு கனியையும் இடுவாய்
நான் புசிக்க"என்றிட
– அவர் மனம் கலங்கும்படி,
"இன்னொரு
பழத்தையும் நான் சாப்பிட
இடு" என்று
சொன்னதும்;
அவர்
அரன் அடிதொழுது இரக்க,
அங்கு
ஒரு கனி வர,
மறு-கனி
புசித்தவன், "கழறு,
இருகனி
இருசுவை வரும் ஆறு
புலப்படும்படி"என
– அவர் ஈசன் திருவடியை வணங்கி
வேண்ட, அங்கே
அவர் கையில் ஒரு பழம் வந்தடைய,
(அதனை
இட்டதும்), அந்த
இரண்டாம் பழத்தை உண்டவன்,
"(ஒரே
மரத்தின்) இரு
பழங்கள் இருவிதச் சுவை பெற்ற
உண்மையை நான் அறியும்படி
சொல்லு" என்று
சொல்ல;
அவர்
அரன் அருள்தனைப் பகர்ந்திட,
அவன்
அறி-வணம்
ஒரு புதுப்பழம் கரம்
வர, அவன்
வெருவொடு பிரிவானே-
அவர்
சிவன் அருள்புரிந்ததைச்
சொல்ல, (அப்படி
எனில் இன்னொரு பழம் வரவழைத்துக்
காட்டு என்று அவன் சொன்னதும்),
அவனும்
அறியும்படி ஒரு புதிய பழம்
அவர் கையில் வந்ததும்,
அவன்
(இவர்
தெய்வம் என்று) அஞ்சி
அவரைப் பிரிந்தான்;
"நசிக்க
ஒன்பது துளை உடல்
அழகு; ஒரு
கணத்து உடம்பதுதனை
இவண் அருள்"
என
நயக்கும் அன்பரது
உளம் மகிழ் உரு
இறை தருவானே-
(சில
காலம் கழித்து, அவன்
இவரோடு வாழ மறுத்ததும்),
"இந்த
நவத்துவாரம் உடைய உடலழகு
அழியட்டும்; ஒரு
பூதகணத்தின் உடம்பை இவ்விடம்
அருள்வாயாக" என்று
விரும்பி இறைஞ்சிய அன்பரது
உள்ளம் மகிழும் உருவினை இறைவன்
தந்தான்; (இவண்
- இவ்விடம்);
நரிக்குலம்
திரி சுடலையில் நடமிடு
நிருத்தன் அங்கழல்-இணை
தொழும் அடியவர்,
நரர்க்கு
இடும்பைகள் அற,
இரு
பதிகமும் மொழிவாரே-
(பின்னர்)
நரிகள்
திரியும் சுடுகாட்டில் ஆடும்
கூத்தனது அழகிய இரு திருவடிகளைத்
தொழும் அடியவரான அவர்,
மனிதர்களுக்குத்
துன்பம் தீர (மூத்த
பதிகங்கள் என்று அழைக்கப்படும்)
இரு
பதிகங்களைப் பாடினார்;
வசிட்டர்
அந்தரர் அயன் அரி தொழு-பதி
மலைத்தடந்தனில் அடி இட
வெருவிய மனத்தர் தம்
தலை-நடைகொடு
கயிலையை அடைவாரே-
வசிஷ்டர்
(முதலான
ரிஷிகள்), தேவர்கள்,
பிரமன்,
திருமால்
எல்லாரும் தொழும் தலைவனான
சிவன் உறையும் தலமான கயிலைமலையைக்
காலால் மிதிக்க அஞ்சித்
தலையால் நடந்து ஏறிக் கயிலையை
அடைந்தார்; (அந்தரர்
- தேவர்);
(பதி
- தலம்;
தலைவன்);
(தடம்
- வழி;
இடம்);
(மலைத்தடம்
- தடமலை
என்று முன்பின்னாக மாற்றியும்
பொருள்கொள்ளல் ஆம்;
தடமலை
- பெரிய
மலை);
மலைக்கு
மங்கையும் வினவிட,
"அனை
இவர் நமக்கு"
எனும்
சொலை அரன் உரை-செயும்- (அப்பொழுது
"இவர்
யார்" என்று)
உமாதேவி
வினவிய பொழுது, "இவர்
நம்மைப் பேணும் அம்மை"
என்ற
சொல்லை ஹரன் உரைத்தான்
(/உரைத்த);
(அனை
- அன்னை
- இடைக்குறை);
(செயும்
- செய்யும்
- இடைக்குறை);
.. .. செடி-வினைகள்
யாவும் எரி புகு பஞ்சு என ..
அறியாமல்,
.. நழுவும்
இக வாழ்வை நிலை என,
அங்கயல்
.. .. .. நயனியரை
நாடும் எனது உயிர் கொண்டிட
.. .. நமனுடைய
தூதர் இடர் தரும் அந்தியம்
.. அணுகாமுன்,
கழுமலவர்
கோனின் அரு-விரை
சிந்திடு
.. .. .. கவின்
மலியும் மாலை-கொடு
மிகும் அன்பொடு
.. .. கழலிணையை
ஓதி வழிபடு நெஞ்சு உற,
.. நிலமீதே
.. எழு-பிறவி
தோறும் உனது அடி சிந்தையில்
.. .. .. எனது
துணை ஆகி அனுதினம் நின்றிட,
.. .. இடைமருது
மேய இறையவ, இங்கு
அருள் புரியாயே;
வழு
மலியும் மூடன் இருபது திண்புயம்
.. .. ..
மணிமுடிகளோடு
நெரிதர அன்று அரு-
.. .. மலையில்
ஒரு பாத விரலது கொண்டு அடர்
.. கயிலாயா;
.. மறி-கடலில்
ஆலம் அது வர, அஞ்சிய
.. .. .. சுரர்
அலறி "ஓலம்"
என,
அவர்
உய்ந்திட
.. .. வலிய
விடம் மேவி அரு-மணி
ஒன்று அணி .. மிடறானே;
தழுவும்
உமை மாதுதனை ஒரு பங்கு என
.. .. .. மகிழும்
மணவாள; திரை-நதி
தங்கிய
.. .. சடையதனில்
நாறு குரவொடு கொன்றை ..
புனைவோனே;
.. சரணம்
நினை மாணி உயிரது கொன்றிட
.. .. .. வரு-மறலி
மாள உதைதரு சங்கர;
.. .. தயை
உடைய நாத; விடையை
விரும்பிய .. பெருமானே.
செழுமலர்கள்
தூவி அரகர என்பவர் திரு உடையர்
ஆவர்- சிறந்த
பூக்களைத் தூவி "ஹரஹர"
என்று
போற்றுபவர்கள் திரு அடைவார்கள்;
(திரு
- செல்வம்;
பாக்கியம்;
தெய்வத்தன்மை;
நல்வினை;
சிறப்பு);
அவரது
பண்டைய செடி-வினைகள்
யாவும் எரி புகு பஞ்சு என
அறியாமல்- அவர்களது
பழைய, துன்பம்
தரும் வினையெல்லாம் தீப்
புகுந்த பஞ்சுபோல் அழியும்
என்று அறியாமல்; (செடி
- துன்பம்);
நழுவும்
இக வாழ்வை நிலை என
– (நாம்
அறியாமலே) நழுவி
அழியும் இவ்வுலக வாழ்வை
நிலையானது என்று எண்ணி;
(இகம்
- இம்மை);
அங்கயல்
நயனியரை நாடும் எனது
உயிர் கொண்டிட நமனுடைய
தூதர் இடர் தரும் அந்தியம்
அணுகாமுன் - அழகிய
கயல்மீன் போன்ற கண்களையுடைய
மாதரை நாடும் என்னுடைய உயிரைக்
கவர எமதூதர்கள் துன்பம்
செய்யும் மரணகாலம் என்னை
நெருங்குவதன் முன்னமே;
(அங்கயல்
- அம்
கயல் - அழகிய
கயல்மீன்); (நயனி
- கண்ணை
உடையவள்);(அந்திமம்
- மரணகாலம்);
கழுமலவர்
கோனின் அரு-விரை
சிந்திடு கவின் மலியும்
மாலை-கொடு- சீகாழியர்
தலைவரான திருஞான சம்பந்தர்
அருளிய அரிய மணம் கமழும் அழகிய
பாமாலைகளால்; (கழுமலம்
- சீர்காழி);
(விரை
- வாசனை);
(சிந்துதல்
- பரப்புதல்);
(கவின்
- அழகு);
மிகும்
அன்பொடு கழலிணையை ஓதி வழிபடு
நெஞ்சு உற – மிகும் அன்போடு
உன் இரு திருவடிகளைப் போற்றி
வணங்கும் மனம் பெற;
(ஓதுதல்
- பாடுதல்);
நிலமீதே
எழு-பிறவி
தோறும் உனது அடி சிந்தையில்
எனது துணை ஆகி அனுதினம்
நின்றிட – மண்ணுலகில் எழுகின்ற
பிறவிகள்தோறும் உன் திருவடி
என் நெஞ்சில் துணை ஆகி என்றும்
நிற்க; (எழுதல்
- தோன்றுதல்);
(சிந்தை
- மனம்);
(அப்பர்
தேவாரம் - 4.94.8 - "புழுவாய்ப்
பிறக்கினும் புண்ணியா உன்னடி
என்மனத்தே வழுவாதிருக்க
வரந்தர வேண்டும்");
இடைமருது
மேய இறையவ, இங்கு
அருள் புரியாயே-
திருவிடைமருதூரில்
எழுந்தருளிய இறைவனே,
இங்கு
அருள்வாயாக; (இறையவன்
- இறைவன்);
வழு
மலியும் மூடன் இருபது திண்புயம்
மணிமுடிகளோடு நெரிதர அன்று
அரு-மலையில்
ஒரு பாத விரலது கொண்டு
அடர் கயிலாயா-
குற்றம்
மிக்க அறிவிலியான இராவணனது
இருபது வலிய புஜங்களும் அழகிய
கிரீடம் அணிந்த தலைகளும்
நசுங்கும்படி முன்பு கயிலைமலையில்
ஒரு பாதவிரலால் நசுக்கியவனே;
(வழு
- குற்றம்);
(புயம்
- புஜம்
- தோள்);
(நெரிதல்
- நசுங்குதல்);
(அடர்த்தல்
- நசுக்குதல்);
மறி-கடலில்
ஆலம் அது வர, அஞ்சிய
சுரர் அலறி "ஓலம்"என
– அலையெழும் பாற்கடலில்
ஆலகாலம் தோன்ற, அது
கண்டு அச்சமுற்ற தேவர்கள்
அலறி "ஓலம்"
என்று
திருவடியில் சரண்புக;
(மறிதல்
- அலையெழுதல்);
(ஓலம்
- அபயம்
வேண்டும் குறிப்புமொழி);
அவர்
உய்ந்திட வலிய விடம் மேவி
அரு-மணி
ஒன்று அணி மிடறானே-
அவர்கள்
உய்ய, வலிய
நஞ்சை விரும்பி உண்டு அரிய
மணி ஒன்றை அணிந்த கண்டம்
உடையவனே; (மேவுதல்
- விரும்புதல்;
உண்ணுதல்);
தழுவும்
உமை மாதுதனை ஒரு பங்கு
என மகிழும் மணவாள
– தழுவும் உமைநங்கையை ஒரு
பாகமாக விரும்பிய மணவாளனே;
திரை-நதி
தங்கிய சடையதனில் நாறு குரவொடு
கொன்றை புனைவோனே-
அலையெழுகின்ற
(/ அலை
மிக்க) கங்கை
தங்கிய சடையில் மணம் கமழும்
குராமலரையும் கொன்றையையும்
அணிந்தவனே; (திரை
- அலை;
திரைதல்
- அலையெழுதல்;);
(புனைதல்
- அணிதல்);
சரணம்
நினை மாணி உயிரது கொன்றிட
வரு-மறலி
மாள உதைதரு சங்கர – உன்
திருவடியை நினைந்த மார்க்கண்டேயரது
உயிரைக் கொல்ல வந்த காலனே
இறக்கும்படி காலனை உதைத்த
சங்கரனே; (சரணம்
- பாதம்);
(மாணி
- பிரமசாரி);
(மறலி
- இயமன்);
(தருதல்
- ஒரு
துணைவினை); (சங்கரன்
- நன்மையைச்
செய்பவன்);
தயை
உடைய நாத – கருணை உடைய
தலைவனே; (தயை
- அருள்);
விடையை
விரும்பிய பெருமானே-
இடபத்தை
வாகனமாக விரும்பிய பெருமானே;
அற்றைக்கு
ஒரு மலர் குறைவுஆகவைக்கத்,
தனது
அக்கத்தினை இட –
அன்று ஒரு நாள் நீ ஒரு பூவைக்
குறையச்செய்தபொழுது,
அவன்
தனது கண்ணையே தோண்டித்
தாமரைப்பூவாக இட்டு வழிபாடு
செய்ய; (அற்றைக்கு
- அன்றைக்கு
- அந்தத்
தினம்); (அக்கம்
- அக்ஷம்
- கண்);
அப்பத்தி-தனக்குப்
பரிசு என வைப்-பல்-திகழ்
வெற்றித் திகிரியை அருள்வோனே- அந்தப்
பக்திக்கு பரிசாகக் கூர்மையான
பற்கள் திகழும் வெற்றியுடைய
சக்கராயுதத்தை அருளியவனே;
(பத்தி
- பக்தி);
(வை
- கூர்மை);
(திகிரி
- சக்கரம்);
மட்டு-அற்ற
செருக்கு உற்று,
இருபது
மற்-கைத்தலம்மெச்சிச்,சிலை
எறி மட்டிக்கு ஒரு
பத்துத் தலை இற நெரி
பாதா- அளவில்லாத
ஆணவம் கொண்டு, இருபது
வலிய கைகளை மிகவும் எண்ணிக்,
கயிலைமலையைப்
பெயர்த்து எறிய முயன்ற மூடனுக்கு
அவனது பத்துத்தலையும் அழியும்படி
நசுக்கிய திருப்பாதனே;
(மட்டு
- அளவு);
(மல்
- வலிமை);
(மெச்சுதல்
- புகழ்தல்;
மதித்தல்);
(சிலை
- மலை);
(மட்டி
- மூடன்);
(இறுதல்
- முரிதல்;
கெடுதல்);
(நெரித்தல்
- நசுக்குதல்);
மத்தத்தொடு
எருக்கு உற்றிடு முடி
எற்றித் திரை சுற்றக்,
கதிர்-மதி
வைத்துப், பெரு-நச்சுப்
பணியையும் அணிவோனே-
ஊமத்தமலரோடு
எருக்கமலரும் இருக்கும்
திருமுடியில், அலைமோதிக்
கங்கை சுற்றிவர, ஒளி
வீசும் திங்களை அணிந்து,
பெரிய
விடப்பாம்பையும் அணிந்தவனே;
(மத்தம்
- ஊமத்தமலர்);
(எற்றுதல்
- மோதுதல்);
(திரை
- அலை;
நதி);
(பணி
- பாம்பு);
எட்டுத்-திசை
சுட்டுப் பெரு-விடம்
எட்டிற்று என அச்சத்தொடு
சுரர் எய்ப்பு-உற்று
அடி பற்றிப் பரவிட –
எல்லாத் திசைகளையும் சுட்டுப்
பெரிய விடம் (ஆலகாலம்)
எட்டியது
என்று பயந்து வருந்தித்
தேவர்கள் உன் திருவடியைச்
சரணடைந்து துதிக்க;
(எட்டுதல்
- நெருங்குதல்);
(சுரர்
- தேவர்);
(எய்ப்பு
- இளைப்பு;
மெய்வருத்தம்);
(பரவுதல்
- துதித்தல்);
அமுதாக
இட்டத்தொடு துற்றிக்
களனிடை நிற்பித்து-
(அவர்களுக்கு
இரங்கி) அமுதம்போல
அந்த நஞ்சை விரும்பி உண்டு
கண்டத்தில் நிறுத்தி;
(இட்டம்
- இஷ்டம்
- விருப்பம்);
(துற்றுதல்
- உண்ணுதல்);
(களன்
- களம்
- கண்டம்);
அரவக்-கச்சினன்
என இற்-பிச்சையை
நச்சித் திரிதரு பெருமானே- பாம்பைக்
கச்சாகக் கட்டி இல்லங்களில்
பிச்சையை விரும்பித் திரிகின்ற
பெருமானே;
(நச்சுதல்
- விரும்புதல்);