04.58 – பொது - ( உமைபங்கன் போற்றி )
2014-03-30
பொது - ( உமைபங்கன் போற்றி )
----------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - "தானன தானன தானன தானா" என்ற சந்தம்).
(லிங்காஷ்டகம் - "ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்")
1)
காமன தாகமெ ரித்தனை போற்றி
சோமனை அஞ்சடை ஏற்றினை போற்றி
சேமம ளித்திடு சேவக போற்றி
கோமக னேஉமை கூறின போற்றி.
பதம்
பிரித்து:
காமனது
ஆகம் எரித்தனை போற்றி;
சோமனை
அம் சடை ஏற்றினை போற்றி;
சேமம்
அளித்திடு சேவக போற்றி;
கோமகனே;
உமை
கூறின போற்றி.
காமனது
ஆகம் எரித்தனை -
மன்மதனது
உடலை எரித்தவனே;
(ஆகம்
-
உடல்);
(எரித்தனை
-
எரித்தாய்
-
எரித்தவனே);
சோமனை
அம் சடை ஏற்றினை -
சந்திரனை
அழகிய சடையின்மீது ஏற்றியவனே;
(சோமன்
-
சந்திரன்);
(அம்
-
அழகு);
சேமம்
அளித்திடு சேவக -
க்ஷேமம்
அளிக்கும் வீரனே;
(சேவகன்
-
வீரன்);
கோமகனே
-உமை
கூறின -
தலைவனே,
உமையை
ஒரு கூறாக உடையவனே;
(உமை
கூறினன் -
உமையை
ஒரு கூறாக உடையவன் -
உமைபங்கன்);
(சம்பந்தர்
தேவாரம் -
2.112.3 - "மங்கைகூறினன்
மான்மறியுடை அங்கையான்");
(எரித்தனை
போற்றி,
ஏற்றினை
போற்றி,
போன்ற
பிரயோக உதாரணம்:
திருவாசகம்
-
போற்றித்திருவகவல்
-
8.4:
அடி-86:
தாயே
ஆகி வளர்த்தனை போற்றி
அடி-209:
கருங்குரு
விக்கன் றருளினை போற்றி
அடி-210:
இரும்புலன்
புலர இசைந்தனை போற்றி);
2)
காலனை நெஞ்சிலு தைத்தனை போற்றி
பாலனை வாழ்ந்திட வைத்தனை போற்றி
வேலனை ஈன்றப ரம்பர போற்றி
கோலம டக்கொடி கூறின போற்றி.
காலனை நெஞ்சில் உதைத்தனை - காலனை மார்பில் உதைத்தவனே;
பாலனை வாழ்ந்திட வைத்தனை - மார்க்கண்டேயரை வாழவைத்தத்தவனே;
வேலனை ஈன்ற பரம்பர - முருகனைப் பெற்ற பரம்பரனே; (பரம்பரன் - மிக மேலானவன்; முழுமுதற்கடவுள்);
கோல மடக்கொடி கூறின - அழகிய இளம் கொடி போன்ற உமையை ஒரு கூறாக உடையவனே;
3)
அன்றெரி நஞ்சினை ஆர்ந்தனை போற்றி
அன்றின ரேரெயி லட்டனை போற்றி
மன்றினி லாடிடு மன்னவ போற்றி
ஒன்றென மாதொடு நின்றனை போற்றி.
பதம்
பிரித்து:
அன்று
எரி நஞ்சினை ஆர்ந்தனை போற்றி;
அன்றினர்
ஏர் எயில் அட்டனை போற்றி;
மன்றினில்
ஆடிடும் மன்னவ போற்றி;
ஒன்று
என மாதொடு நின்றனை போற்றி.
அன்று
எரி நஞ்சினை ஆர்ந்தனை -
முன்பு
ஆலகால விடத்தை உண்டவனே;
(ஆர்தல்
– உண்ணுதல்);
அன்றினர்
ஏர் எயில் அட்டனை -
பகைவர்களது
அழகிய கோட்டைகளை எரித்தவனே;
(அன்றினர்
-
பகைவர்);
(ஏர்
எயில் -
அழகிய
கோட்டைகள் -
முப்புரங்கள்);
(அடுதல்
-
எரித்தல்;
அழித்தல்);
மன்றினில்
ஆடிடும் மன்னவ -
அம்பலத்தில்
ஆடும் நடராஜனே;
ஒன்று
என மாதொடு நின்றனை -
உமையோடு
ஒன்றாகி நின்றவனே;
4)
வெற்புவி லாலர ணெய்தனை போற்றி
மற்புய மெட்டுடை வல்லவ போற்றி
இற்பலி வெண்டலை ஏற்றனை போற்றி
அற்புத னேஉமை பங்கின போற்றி.
பதம்
பிரித்து:
வெற்பு
விலால் அரண் எய்தனை போற்றி;
மற்புயம்
எட்டுடை வல்லவ போற்றி;
இல்
பலி வெண் தலை ஏற்றனை போற்றி;
அற்புதனே
உமைபங்கின போற்றி.
வெற்பு
விலால் அரண் எய்தனை -
மேருமலை
என்ற வில்லால் முப்புரங்களை
எய்தவனே;
(அரண்
-
கோட்டை
-
முப்புரம்);
(சம்பந்தர்
தேவாரம் -
1.135.10 - “பருவிலாலெயி
லெய்துபராய்த்துறை மருவினான்றனை
வாழ்த்துமே.”);
மற்புயம்
எட்டுடை வல்லவ – வலிமைமிக்க
எட்டுத் தோள்களையுடைய சமர்த்தனே;
(மற்புயம்
=
மல்
+
புயம்);
(வல்லவன்
-
வலிமையுடையவன்;
சமர்த்தன்);
(அப்பர்
தேவாரம் -
4.9.2 - "கண்காள்
காண்மின்களோ -
கடல்
நஞ்சுண்ட கண்டன்தன்னை எண்தோள்
வீசிநின் றாடும் பிரான்தன்னைக்
கண்காள் காண்மின்களோ );
இல்
பலி வெண் தலை ஏற்றனை -
பல
இல்லங்களில் வெண்ணிற மண்டையோட்டில்
பிச்சை ஏற்றவனே;
அற்புதனே
உமைபங்கின -
அற்புதனே,
உமைபங்கனே;
5)
விண்ணவ ரேத்திடு முக்கண போற்றி
தண்ணதி பாய்தரு வேணிய போற்றி
எண்ணடி யார்வினை தீர்த்தனை போற்றி
பெண்ணொரு பங்கில மர்ந்தனை போற்றி;
விண்ணவர்
ஏத்திடும் முக்கண – தேவர்கள்
துதிக்கும் முக்கண்ணனே;
தண்
நதி பாய்தரு வேணிய -
குளிர்ந்த
கங்கை பாயும் சடையினனே;
(தண்ணதி
-
தண்
நதி -
குளிர்ந்த
கங்கை);
(தரு
-
ஒரு
துணைவினைச்சொல்);
(வேணி
-
சடை);
எண்ணு
அடியார் வினை தீர்த்தனை -
உன்னை
நினையும் பக்தர்களது வினைகளைத்
தீர்த்தவனே;
(எண்ணுதல்
-
நினைதல்);
பெண்
ஒரு பங்கில் அமர்ந்தனை -
உமையை
ஒரு கூறாக விரும்பியவனே;
6)
வெள்விடை ஏறிய வித்தக போற்றி
கள்விரி கொன்றைய ணிந்தனை போற்றி
ஒள்ளெரி வண்ணவு ருத்திர போற்றி
விள்ளரி யாய்உமை கூறின போற்றி.
வெள்விடை
ஏறிய வித்தக -
வெண்ணிற
இடபத்தை வாகனமாக உடைய வித்தகனே;
(வித்தகன்
-
சாமர்த்தியம்
உள்ளவன்;
பேரறிவாளன்);
கள்
விரி கொன்றை அணிந்தனை -
தேன்
நிறைந்த கொன்றைப்பூவைச்
சூடியவனே;
(கள்
-
தேன்);
(விரிதல்
-
மலர்தல்);
ஒள்
எரி வண்ண உருத்திர -
ஒளி
வீசும் நெருப்பு போன்ற
செம்மேனியுடைய உருத்திரனே;
( "ஒள்
எரி வண்ண =
தீவண்ணனே"
என்று
தனியாகவும் பொருள்கொள்ளலாம்);
விள்ளரியாய்
-
விள்ள
அரியாய் -
சொல்லற்கு
அரியவனே;
(விள்ளுதல்
-
சொல்லுதல்);
(சம்பந்தர்
தேவாரம் -
3.81.2 - “சொல்லரிய
தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர
மாமே.”);
உமை
கூறின – உமாதேவியை ஒரு கூறாக
உடையவனே;
(கூறின
– கூறினன் என்பதன் அண்மை
விளி);
(சம்பந்தர்
தேவாரம் -
2.112.3 - “மங்கைகூறினன்
மான்மறியுடை அங்கையானுறை
யாடானை”);
7)
நாரண னுக்கரி நல்கினை போற்றி
ஆரண மோதிய நாவின போற்றி
வாரண ஈருரி போர்த்தனை போற்றி
பூரண மாதொரு பங்கின போற்றி.
பதம்
பிரித்து:
நாரணனுக்கு
அரி நல்கினை போற்றி;
ஆரணம்
ஓதிய நாவின போற்றி;
வாரண
ஈருரி போர்த்தனை போற்றி;
பூரண;
மாது
ஒரு பங்கின போற்றி.
நாரணனுக்கு
அரி நல்கினை -
திருமாலுக்குச்
சக்கராயுதத்தை அருளியவனே;
(அரி
-
சக்கரம்;
3. ஆயுதம்);
(விஷ்ணு
ஸஹஸ்ர நாமத்தின் தியான
ச்லோகத்தில்,
”அரி
நளின,
கதா,
சங்க
பாணி:”
என்னும்
சொற்றொடரில் வரும் 'அரி'
சக்கரத்தைக்
குறிக்கும் ஸம்ஸ்க்ருதச்
சொல்);
(நல்குதல்
-
கொடுத்தல்);
ஆரணம்
ஓதிய நாவின -
வேதங்களைப்
பாடியருளியவனே;
(ஆரணம்
-
வேதம்);
வாரண
ஈருரி போர்த்தனை -
ஆனையின்
உரித்த தோலைப் போர்த்தவனே;
(ஈர்த்தல்
-
உரித்தல்);
(ஈர்
-
ஈரம்;
பசுமை);
பூரண
மாது ஒரு பங்கின -
பூரணனே,
உமை
ஒரு பங்கினனே;
8)
வாளவு ணன்வலி வாட்டினை போற்றி
நீளவ வன்தொழு நின்மல போற்றி
வாளவ னுக்களி பண்பின போற்றி
கோளர வாஉமை கூறின போற்றி.
பதம்
பிரித்து:
வாள்
அவுணன் வலி வாட்டினை போற்றி;
நீள
அவன் தொழு நின்மல போற்றி;
வாள்
அவனுக்கு அளி பண்பின போற்றி;
கோள்
அரவா,
உமை
கூறின போற்றி.
வாள்
அவுணன் வலி வாட்டினை -
கொடிய
அரக்கனான இராவணனது வலிமையை
அழித்தவனே;
(வாள்
அவுணன் -
கொடிய
அரக்கன் -
இராவனன்);
(வலி
-
ஆற்றல்;
வலிமை);
(வாட்டுதல்
-
வாடச்செய்தல்;
கெடுத்தல்);
(அப்பர்
தேவாரம் -
5.74.10 - “மறங்கொள்
வாளரக் கன்வலி வாட்டினான்
எறும்பி யூர்மலை யெம்மிறை
காண்மினே.”);
நீள
அவன் தொழு நின்மல -
பன்னெடுங்காலம்
அவனால் தொழப்பெற்ற தூயனே;
(நீள
– நெடுங்காலமாக;
நீள்
-
நெடுங்காலம்));
வாள்
அவனுக்கு அளி பண்பின – அவனுக்குச்
சந்திரஹாஸம் என்ற வாளை
அருளியவனே;
(பண்பு
-
குணம்;
இயல்பு);
கோள்
அரவா உமை கூறின -
கொல்லும்
தன்மையுடைய பாம்பை அணிந்தவனே,
உமைபங்கனே;
9)
மாலய னேடவ ளர்ந்தனை போற்றி
ஆலம துண்டமி டற்றின போற்றி
மூலமு மந்தமு மாயினை போற்றி
கோலவ ணங்கொரு கூறின போற்றி.
பதம்
பிரித்து:
மால்
அயன் நேட வளர்ந்தனை போற்றி;
ஆலமது
உண்ட மிடற்றின போற்றி;
மூலமும்
அந்தமும் ஆயினை போற்றி;
கோல
அணங்கு ஒரு கூறின போற்றி.
மால்
அயன் நேட வளர்ந்தனை -
திருமால்
பிரமன் இவர்கள் தேடும்படி
ஓங்கியவனே;
(நேட
-
தேட);
(வளர்தல்
-
ஓங்குதல்;
நீளுதல்);
ஆலம்
அது உண்ட மிடற்றின -
நீலகண்டனே;
(மிடறு
-
கண்டம்);
மூலமும்
அந்தமும் ஆயினை -
முதலும்
முடிவும் ஆனவனே;
கோல
அணங்கு ஒரு கூறின -
அழகிய
உமையம்மையை ஒரு கூறாக உடையவனே;
(கூறினன்
=
ஒரு
கூறில் உடையவன்;
கூறின
-
கூறினனே
என்ற விளி);
10)
ஏசிடு வார்க்கில னாயினை போற்றி
பேசிடு வார்வினை தீர்த்தனை போற்றி
மாசில னேமழு வாளின போற்றி
மாசிவை வாமம கிழ்ந்தனை போற்றி.
பதம்
பிரித்து:
ஏசிடுவார்க்கு
இலன் ஆயினை போற்றி;
பேசிடுவார்
வினை தீர்த்தனை போற்றி;
மாசு
இலனே,
மழு
வாளின போற்றி;
மா
சிவை வாமம் மகிழ்ந்தனை போற்றி.
ஏசிடுவார்க்கு
இலன் ஆயினை -
இகழ்பவர்களுக்கு
அருள் இல்லாதவனே;
(ஏசுதல்
-
இகழ்தல்);
பேசிடுவார்
வினை தீர்த்தனை -
போற்றும்
பக்தர்களது வினையைத் தீர்ப்பவனே;
(பேசுதல்
-
துதித்தல்;
திருப்புகழைப்
பேசுதல்);
(அப்பர்
தேவாரம் -
6.1.1 - “அரியானை
...
பெரும்பற்றப்
புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம்
பிறவா நாளே”);
மாசு
இலனே,
மழு
வாளின -
குற்றமற்றவனே,
மழு
வாளை ஏந்தியவனே;
மா
சிவை வாமம் மகிழ்ந்தனை -
ஆழகிய
உமையை இடப்பக்கம் கூறாக
விரும்பியவனே;
(மா
=
அழகு);
(சிவை
=
உமை;
பார்வதி);
11)
கொக்கிற கும்புனை பிஞ்ஞக போற்றி
நக்கர ணஞ்சுடு நாயக போற்றி
முக்கண முப்புரி நூலின போற்றி
பக்கமு மைக்களி பாங்கின போற்றி.
பதம்
பிரித்து:
கொக்கிறகும்
புனை பிஞ்ஞக போற்றி;
நக்கு
அரணம் சுடு நாயக போற்றி;
முக்கண,
முப்புரி
நூலின போற்றி;
பக்கம்
உமைக்கு அளி பாங்கின போற்றி.
கொக்கிறகும்
புனை பிஞ்ஞக -
கொக்கிறகை
அணிந்த தலைக்கோலம் உடையவனே;
(பிஞ்ஞகன்
-
தலைக்கோலம்
உடையவன்);
(கொக்குவடிவாய்
இருந்தமையின்,
'குரண்டன்'
எனப்
பெயர்பெற்ற அசுரனை அழித்து,
அவன்
இறகைச் சிவபிரான் தலையில்
அணிந்தனன் என்பது புராண
வரலாறு);
(அப்பர்
தேவாரம் -
6.39.2 - "கொக்கிறகு
சென்னி யுடையான் கண்டாய்");
நக்கு
அரணம் சுடு நாயக -
சிரித்து
முப்புரங்களை எரித்த தலைவனே;
முக்கண
முப்புரி நூலின -
முக்கண்ணனே,
முப்புரி
நூல் அணிந்தவனே;
பக்கம்
உமைக்கு அளி பாங்கின -
ஒரு
பக்கத்தை உமைக்கு அளித்தவனே;
(பாங்கு
-
இயல்பு
);
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - "தானன தானன தானன தானா" என்ற சந்தம்.
வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.
குரு - நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.
லகு - குறில் (ஒற்றுத் தொடராதபோது).
அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.
வடமொழியில் ஐகாரம் நெடில் (குரு) என்று கருதப்படினும், தமிழ்ப் பாடலில் அலகிடும்போது ஐகாரக் குறுக்கம் வரும் இடங்களில் அது குறில் (லகு) என்று கொள்ளப்படும்.)
2) உதாரணம்: - லிங்காஷ்டகம் -
"ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஶோபித லிங்கம்
ஜன்மஜ து:க விநாஶக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஶிவலிங்கம்"
----------- --------------
No comments:
Post a Comment