01.04 - பொது - "எண்ணியது எய்தலாம்"
2007-11-09
பொது -
எண்ணியது எய்தலாம்
----------------------------
(அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு.)
1)
மந்திர அஞ்செழுத்(து) ஓதி
.. மலரடி தவிரவே(று) ஏதும்
சிந்தனை இலாதமார்க் கண்டர்
.. சிறப்புடன் இருந்திடக், கொல்ல
வந்தவன் தரையினில் வீழ்ந்து
.. மாளுமா(று) உதைத்தருள் செய்த
எந்தையை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
(அஞ்சு
எழுத்து -
'நமச்சிவாய'
என்ற
பஞ்சாட்சரம்;
எந்தை
-
எம்
தந்தை;
அன்பர்
-
பக்தர்;
எய்துதல்
-
அடைதல்;
)
2)
ஊற்றெனப் பெருகிடும் அன்போ(டு)
.. "உலகெலாம் பெற்றவா" என்று
போற்றிய வள்மகப் பேற்றுப்
.. பொழுதினில் பொங்கிய பொன்னி
ஆற்றினைக் கடக்கஒண் ணாத
.. அன்னையின் வடிவினில் வந்த
ஏற்றனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
(*
இப்பாடல்
சுட்டும் நிகழ்ச்சியைத்
திருச்சிராப்பள்ளித்
தலவரலாற்றிற் காண்க;
'தாயும்
ஆனவன்'
- திருச்சிராப்பள்ளியில்
உறையும் ஈசன் திருநாமம்.
போற்றுதல்
-
வணங்குதல்;
ஏறு
-
எருது;
இடபம்;
ஏற்றன்
-
ஏற்றை
உடையவன்.
விருஷப
வாஹனன் -
சிவன்;)
3)
அடையலாம் அமுதென எண்ணி,
.. அரவினைக் கயிறெனக் கொண்டு
கடலினைக் கடைந்தவர், அங்குக்
.. காய்விடம் எழமிக அஞ்சிப்
படர்சடை யாய்அருள் என்னப்
.. பரிந்ததை மிடற்றினில் வைத்த
இடபனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
(அரவு
-
பாம்பு;
இங்கே
வாசுகி;
காய்விடம்
-
எரிக்கும்
விஷம்;
(காய்தல்
-
சுடுதல்;
எரித்தல்;
அழித்தல்);
பரிதல்
-
இரங்குதல்;
மிடறு
-
கழுத்து;
இடபம்
-
எருது;
காளை;
விருஷபம்;
இடபன்
-
இடபத்தை
உடையவன் -
சிவன்;)
4)
குறையிலாப் பூரண னாய்ஓர்
.. கூறுமை மங்கையைக் கொண்டு
பிறையொடு கொன்றையும் சூடும்
.. பேரரு ளாளனை, நான்கு
மறைகளும் மொழிபெரு மானை,
.. மானொரு கரத்தினில் ஏந்தும்
இறைவனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
(பூரணன்
-
முழுமை
ஆனவன்;
ஓர்
கூறு உமை மங்கை -
உருவில்
ஒரு பாகம் பார்வதி;
பேர்
அருளாளன் -
பெரிய
அருட்கடல் ஆனவன்;
மறை
-
வேதம்;)
5)
கரும்பினால் ஆனவில் ஒன்றைக்
.. கையினில் ஏந்திஐ வாச
அரும்புகள் அத்திரம் ஆக,
.. அருந்தவம் குலைத்திட எண்ணி
மருங்கடை மதனையெ ரித்த
.. மாதவன் வார்சடை மைந்தன்
இருங்கழல் வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
(அரும்பு
-
மொட்டு.
இங்கே
மலருக்கு ஆகுபெயராக வந்தது;
அரும்
தவம் -
சிறந்த
தவம்;
மருங்கு
அடை -
பக்கத்தில்
வந்த;
மதன்
-
காமன்;
மாதவன்
-
பெரிய
தவக்கோலத்தை உடையவன்;
(அப்பர்
தேவாரம் -
6.97.7 - "அலைத்தோடு
புனற்கங்கை சடையிற் கண்டேன்
.....
மறைவல்ல
மாதவனைக் கண்ட வாறே.");
வார்சடை
-
நீள்சடை;
மைந்தன்
-
வீரன்;
இருமை
-
பெருமை
(Greatness,
largeness, hugeness, eminence);
இருங்கழல்
-
பெருமையோடு
கூடிய திருவடிகள்;
(திருவாசகம்
-
போற்றித்
திருவகவல் -
"இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி");
)
6)
பழியறு தமிழுரை நாவர்
.. பசிக்குண வொடுகுளம் சோலை
வழியினில் அமைத்துநின் றானை,
.. மலைமகள் பங்கனை, நெற்றி
விழியனைப், புனற்சடை யானை,
..
வெண்டலை
யிற்பலி ஏற்கும்
எழிலனை
வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
7)
முன்புல கங்களை ஆக்கு[ம்]
.. முதல்வனை, முடிவிலொ டுக்கிப்
பின்புமி ருக்கிற தேவைப்,
.. பிறைமதி சூடுபி ரானை,
என்பணி எந்தையை, எல்லா
.. இடரையும் களைந்தருள் கின்ற
இன்பனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
8)
பாந்தளும் திங்களும் சேர்ந்து
.. பயில்சடை உடையவன் தாளை
ஆய்ந்தவர் தொழுதுவ லம்செய்
.. அம்மலை எடுத்தஇ லங்கை
வேந்தனின் உரம்கெட வெற்பின்
.. மேல்விரல் இட்டிசை கேட்ட
ஏந்தலை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
9)
நரிகளைப் பரியென மாற்றி
.. நாடகம் ஆடுமெம் மானைப்,
பிரியமாய்த் திருவடி என்றும்
.. பேணினாள் பிட்டைஉண் பானை,
அரியொடு பிரமனும் தேடி
.. அலந்திட அவரிடை நின்ற
எரியனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
10)
வளிபுனல் வெளிஅனல் மண்ணாய்
.. வருகிற சிவனைஎண் ணாத
தெளிவிலா மனத்தவர் சொல்லும்
.. சிறுவழி சென்றுழ லாதே;
அளியொடு தொழுகிற பத்தர்
.. அகத்தினில் இரண்டற நிற்கும்
எளியனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
11)
பூசனை புரிகிற போதோர்
.. பூக்குறைந் திடவொரு கண்ணை
வாசனை மலரென இட்டு
.. மாயவன் வணங்கிடக் கண்டு,
நேசமாய் ஆழியீந் தானை,
.. நினைபவர் நெஞ்சினை நீங்கா
ஈசனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
படிக்க எளிமையாக இருப்பதற்காக இப்பாடல்களில் சில இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. அவ்விடங்களில் முதற்சொல்லின் கடைசி எழுத்து அடைப்புக்குறிகளுக்குள் காட்டப்பட்டுள்ளது.
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
**
பைஞ்ஞீலிக்குப்
போகும் திருநாவுக்கரசரின்
பசியைப் போக்க,
வழியில்
அவருக்குச் சிவன் கட்டுச்சோறு
தந்தருளியது -
பெரிய
புராணத்தில் காண்க -
திருநாவுக்கரசர்
புராணம் #305:
"காவுங்
குளமும் முன்சமைத்து ......
";
(பழி
-
குற்றம்;
பாவம்;
அறுத்தல்
-
நீக்குதல்;
இல்லாமற்
செய்தல்;
பழியறு
தமிழ் -
பாவத்தைப்
போக்கும் தமிழான தேவாரம்;
புனல்
-
இங்கே,
கங்கை;
வெண்டலை
-
வெண்
தலை -
பிரம
கபாலம்;
பலி
-
பிச்சை;
எழிலன்
-
அழகன்;
சுந்தரன்;)
7)
முன்புல கங்களை ஆக்கு[ம்]
.. முதல்வனை, முடிவிலொ டுக்கிப்
பின்புமி ருக்கிற தேவைப்,
.. பிறைமதி சூடுபி ரானை,
என்பணி எந்தையை, எல்லா
.. இடரையும் களைந்தருள் கின்ற
இன்பனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
(ஒடுக்குதல்
-
தன்னுள்
ஒடுங்கச் செய்தல்;
தே
-
தெய்வம்;
பிரான்
-
தலைவன்;
கடவுள்;
சிவன்;
என்பு
அணி எந்தை -
எலும்பை
ஆபரணமாகப் பூணும் எம் தந்தை;
களைதல்
-
நீக்குதல்;
இன்பன்
-
இன்பம்
தருபவன்;
ஆனந்தவடிவு
ஆனவன்;)
8)
பாந்தளும் திங்களும் சேர்ந்து
.. பயில்சடை உடையவன் தாளை
ஆய்ந்தவர் தொழுதுவ லம்செய்
.. அம்மலை எடுத்தஇ லங்கை
வேந்தனின் உரம்கெட வெற்பின்
.. மேல்விரல் இட்டிசை கேட்ட
ஏந்தலை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
(பாந்தள்
-
பாம்பு;
பயில்தல்
-
பொருந்துதல்;
தங்குதல்;
தாள்
-
திருவடி;
ஆய்தல்
-
ஆராய்தல்;
சிந்தித்தல்;
மலை
-
இங்கே
கயிலை மலை;
உரம்
-
வலிமை;
வெற்பு
-
மலை;
ஏந்தல்
-
அரசன்;
பெருமையில்
சிறந்தவன்;)
9)
நரிகளைப் பரியென மாற்றி
.. நாடகம் ஆடுமெம் மானைப்,
பிரியமாய்த் திருவடி என்றும்
.. பேணினாள் பிட்டைஉண் பானை,
அரியொடு பிரமனும் தேடி
.. அலந்திட அவரிடை நின்ற
எரியனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
(பரி
-
குதிரை;
எம்மான்
-
எம்
சுவாமி;
எம்
தந்தை;
திருவடி
பேணினாள் பிட்டு -
திருவடியை
வணங்கிய வந்தியின் பிட்டு;
அலத்தல்
-
துன்பமுறுதல்;
அவர்
இடை நின்ற -
அவர்களுக்கு
நடுவில் நின்ற;
எரி
-
பிரகாசம்;
நெருப்பு;
)
10)
வளிபுனல் வெளிஅனல் மண்ணாய்
.. வருகிற சிவனைஎண் ணாத
தெளிவிலா மனத்தவர் சொல்லும்
.. சிறுவழி சென்றுழ லாதே;
அளியொடு தொழுகிற பத்தர்
.. அகத்தினில் இரண்டற நிற்கும்
எளியனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
(வளி
-
காற்று;
புனல்
-
நீர்;
வெளி
-
ஆகாயம்;
அனல்
-
தீ;
மண்
-
நிலம்;
அளி
-
அன்பு;
அகம்
-
உள்ளிடம்;
மனம்;
இரண்டு
அற -
(அத்துவைதமாக)
ஒன்றாகக்
கலந்து;
(திருநாவுக்கரசர்
தேவாரம் -
5.60.1 - "... பேத
மின்றி அவரவ ருள்ளத்தே மாதும்
தாமும் மகிழ்வர்மாற் பேறரே");
எளியன்
-
எளிதில்
பெறப்படுபவன்;)
11)
பூசனை புரிகிற போதோர்
.. பூக்குறைந் திடவொரு கண்ணை
வாசனை மலரென இட்டு
.. மாயவன் வணங்கிடக் கண்டு,
நேசமாய் ஆழியீந் தானை,
.. நினைபவர் நெஞ்சினை நீங்கா
ஈசனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!
(*
திருமால்
ஆயிரம் தாமரைப் பூக்களால்
ஈசனைப் பூசிக்கும்
பொழுது ஒரு பூக் குறையத் தன்
கண்ணைத் தோண்டி,
அதையே
மலராக இட்டு வழிபட்டுச்
சக்கராயுதம் பெற்றதைத்
திருவீழிமிழலைத் தலவரலாற்றிற்
காண்க..
அப்பர்
தேவாரம் -
திருமுறை
4.107.9
- "கேழல
தாகி...கண்ணிடந்து
இட்டஅம் மாலவற்கு அன்று
ஆழியும் ஈந்து..."
மாயவன்
-
திருமால்;
ஆழி
-
சக்கராயுதம்;
ஈதல்
-
அளித்தல்;
ஈசன்
-
இறைவன்;
சிவன்;)
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு:
படிக்க எளிமையாக இருப்பதற்காக இப்பாடல்களில் சில இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. அவ்விடங்களில் முதற்சொல்லின் கடைசி எழுத்து அடைப்புக்குறிகளுக்குள் காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment