சிவன் பாமாலை - பதிகம், திருப்புகழ், சிலேடை - by - வி. சுப்பிரமணியன்
Devotional Tamil Poetry on Siva - Padhigams by V. Subramanian
"சிவசிவ என்றிடத் தீவினை மாளும்"
பனி
மலிந்த தடவரை மன்னவன் பயந்த
பைங்கிளி பூங்கொடி மெல்லிடை
வனிதை தன்னை ஓர் பாகம்
விரும்பினாய்-
மலைமன்னனான
இமவான் பெற்ற அழகிய கிளி
போன்றவளும் கொடி போன்ற
மெல்லிடையை உடைய பெண்னுமான
உமாதேவியை ஒரு பாகமாக
விரும்பியவனே;
கழல்
உம்பர் போற்ற ஒரு குன்றைக்
குனி-வில்
என ஏந்திக் கூடார்-புரம்
எய்தான்- திருவடியைத்
தேவர்கள் வழிபட,
அவர்களுக்கு
இரங்கி ஒரு மலையை வளைக்கின்ற
வில்லாக ஏந்திப் பகைவர்களது
முப்புரங்களை எய்தவன்;
(உம்பர்
- தேவர்கள்);
(குனித்தல்
- வளைத்தல்);
(கூடார்
- பகைவர்);
தனியன்,உமைபங்கன்- ஒப்பற்றவன்,
உமையை
ஒரு பங்கில் உடையவன்;
தாளை
மறவாதார்க்கு இனியன் உறை-கோயில்
எழில்கொள் இடையாறே-
தன்
திருவடியை எப்பொழுதும்
நினைந்து போற்றும் பக்தர்களுக்கு
இனிமை பயக்கின்ற சிவபெருமான்
உறையும் கோயில் அழகிய திருவிடையாறு
ஆகும்;
2)
மறையின்
பொருள்நால்வர் மகிழ விரிசெய்தான்
அறையும்
கடல்நஞ்சை ஆர்ந்த அருளாளன்
பறையின்
ஒலியோங்கப் படுகா னிடையாடும்
இறைவன்
உறைகோயில் எழில்கொள் இடையாறே.
மறையின்
பொருள் நால்வர் மகிழ விரி-செய்தான்- வேதப்பொருளைச்
சனகாதியர் நால்வருக்கு
உபதேசித்தவன்;
அறையும்
கடல் நஞ்சை ஆர்ந்த அருளாளன்- ஒலிக்கின்ற
கடலில் எழுந்த விடத்தை உண்ட
(/உண்டு
அணிந்த) அருளாளன்;
(ஆர்தல்
- உண்தல்;
அணிதல்);
பறையின்
ஒலி ஓங்கப் படுகானிடை ஆடும்- பறையின்
ஓசை பெருகச் சுடுகாட்டில்
ஆடுகின்ற;
இறைவன்
உறை-கோயில்
எழில்கொள் இடையாறே-
சிவபெருமான்
உறையும் கோயில் அழகிய திருவிடையாறு
ஆகும்;
3)
அம்மால்
தொழுதேத்த ஆழி அருள்செய்தான்
கைம்மா
உரிபோர்த்தான் கசியும்
அடியார்தம்
வெம்மா
வினையெல்லாம் வீட்டி நலம்நல்கும்
எம்மான்
உறைகோயில் எழில்கொள் இடையாறே.
அம்-மால்
தொழுதேத்த ஆழி அருள்செய்தான்- விஷ்ணு
செய்த வழிபாட்டிற்கு மகிழ்ந்து
சக்கராயுதத்தை ஈந்தவன்;
(அ
- பண்டறிசுட்டு);
(ஆழி
- சக்கரம்);
கசியும்
அடியார்தம் வெம்-மா-வினையெல்லாம்
வீட்டி நலம் நல்கும்-
உள்ளம்
கசிந்து வழிபடும் பக்தர்களது
கொடிய பெரிய வினைகளையெல்லாம்
அழித்து நன்மை புரிகின்ற;
(வீட்டுதல்
- அழித்தல்);
எம்மான்
உறை-கோயில்
எழில்கொள் இடையாறே-
எம்பெருமான்
உறையும் கோயில் அழகிய திருவிடையாறு
ஆகும்;
இந்துதனை
வைத்த ஈசன் இள-ஏற்றன்- சந்திரனை
வைத்த ஈசன், இளைய
எருதை வாகனமாக உடையவன்;
(இந்து
- சந்திரன்);
அந்தம்
முதல் இல்லான்-
முதலும்
முடிவும் இல்லாதவன்;
அடியார்
மிடி தீர்க்கும் எந்தை
உறை-கோயில்
எழில்கொள் இடையாறே-
பக்தர்களது
துன்பத்தைத் தீர்க்கும்
சிவபெருமான் உறையும் கோயில்
அழகிய திருவிடையாறு ஆகும்;
5)
ஆய்ந்த
மலரைந்தை அம்பா உடையானைக்
காய்ந்த
நுதல்நாட்டம் காட்டும்
இறைகங்கை
பாய்ந்த
சடையண்ணல் பலிதேர்ந் துழல்கின்ற
ஏந்தல்
உறைகோயில் எழில்கொள் இடையாறே.
ஆய்ந்த
மலர் ஐந்தை அம்பா உடையானைக்
காய்ந்த நுதல்-நாட்டம்
காட்டும் இறை- சிறந்த
பூக்கள் ஐந்தை அம்பாக உடைய
மன்மதனைச் சுட்டெரித்த
நெற்றிக்கண் காட்டும் இறைவன்;
(அம்பா
- அம்பாக;
கடைக்குறை
விகாரம்); (நுதல்
- நெற்றி);
(நாட்டம்
- கண்);
கங்கை
பாய்ந்த சடை அண்ணல்-
கங்கையைச்
சடையில் தரித்தவன்;
பலி
தேர்ந்து உழல்கின்ற ஏந்தல்
உறை-கோயில்
எழில்கொள் இடையாறே-
பிச்சையேற்றுத்
திரிகின்ற தலைவனான சிவபெருமான்
உறையும் கோயில் அழகிய திருவிடையாறு
ஆகும்; (பலி
- பிச்சை);
மணிபோல மைதான் திகழ் கண்டன்- ஆலகாலம்
ஒரு மணி போலக் கண்டத்தில்
திகழ்கின்றவன்;
மலரோன்
சிரம் ஒன்றைக் கொய்தான்-
பிரமனது
தலைகளில் ஒன்றைக் கிள்ளியவன்;
மலை
வில்லாக் கொண்டு புரமூன்றை
எய்தான் உறை-கோயில்
எழில்கொள் இடையாறே-
மேருமலையை
வில்லாகக் கொண்டு முப்புரங்களை
எய்த சிவபெருமான் உறையும்
கோயில் அழகிய திருவிடையாறு
ஆகும்; (வில்லா
- வில்லாக);
8)
தொட்டு
மலைபேர்த்த துட்டன் அழவூன்று(ம்)
நட்டன்
நரையேற்றன் நல்ல இசைகேட்டு
மட்டில்
வரமீந்த வள்ளல் மலைமங்கை
இட்டன்
உறைகோயில் எழில்கொள் இடையாறே.
தொட்டு
மலைபேர்த்த துட்டன் அழ
ஊன்று(ம்)
நட்டன்- கைகளால்
பற்றிக் கயிலைமலையைப் பெயர்த்த
துஷ்டனான இராவணன் வலியால்
துடித்து அழும்படி பாதவிரல்
ஒன்றை ஊன்றி அவனை நசுக்கிய
கூத்தன்; (நட்டன்
- கூத்தன்);
நடம்
ஆடும் ஈசன் உறை-கோயில்
எழில்கொள் இடையாறே-
கூத்தாடும்
ஈசனான சிவபெருமான் உறையும்
கோயில் அழகிய திருவிடையாறு
ஆகும்;
11)
கல்லால்
தொழுதாலும் கடியார் மலராக்கொள்
நல்லான்
தமிழ்பாடி நம்பி அடைவார்கட்கு
எல்லாம்
அருள்கின்ற எந்தை கரவென்றும்
இல்லான்
உறைகோயில் எழில்கொள் இடையாறே.
கல்லால்
தொழுதாலும் கடி ஆர் மலராக்கொள்
நல்லான்- கல்லை
எறிந்து வழிபட்டாலும் வாசமலராக
ஏற்று அருளும் நல்லவன்;
(* சாக்கியநாயனார்
வரலாற்றைக் காண்க);
தமிழ்
பாடி நம்பி அடைவார்கட்கெல்லாம்
அருள்கின்ற எந்தை-
தேவாரம்
திருவாசகம் முதலிய பாமாலைகளைப்
பாடி விரும்பி அன்போடு
சரணடைந்தவர்களுக்கெல்லாம்
அருள்செய்யும் எம் தந்தை;
(நம்பி
அடைவார்கட் கெல்லாம் அருள்கின்ற
= 1. அடி
அடைந்தவர்கள் எத்தகையவரே
ஆயினும் அருள்கின்ற;
2. அடி
அடைந்தவர்களுக்கு அவர்கள்
விரும்பிய எல்லா வரங்களையும்
அருள்கின்ற);
கரவு
என்றும் இல்லான் உறை-கோயில்
எழில்கொள் இடையாறே-
வஞ்சமின்றி
வழங்குகின்ற சிவபெருமான்
உறையும் கோயில் அழகிய திருவிடையாறு
ஆகும்; (கரவு
- ஒளித்தல்;
வஞ்சம்);
வானோரும்
மண்ணோரும் கூவிளம் வன்னி
கொடு போற்றிசெயும் மாதேவன்- தேவர்களும்
மனிதர்களும் வில்வம் வன்னி
இவற்றால் வழிபாடு செய்யும்
மகாதேவன்;
சீர்
வாயால் பன்னி அவன் தாள் பணி- அப்பெருமானது
புகழை வாயால் பாடி அவன்
திருவடியைப் பணிவாயாக;
(பன்னுதல்
- பாடுதல்;
புகழ்தல்);
(சம்பந்தர்
தேவாரம் - 2.106.1 - "வலஞ்சுழி
வாணனை வாயாரப் பன்னி ஆதரித்து
ஏத்தியும் பாடியும் வழிபடும்
அதனாலே");
ஏலோர்
எம்பாவாய்- அசைநிலை;
3)
நாடே
அறியு(ம்)
நரைவிடையான்
நற்கழலை
நாடோறும்
ஏத்திடுவேன் நானென்றாய்;
நம்பிவந்தோம்
தோடாரும்
காதுடையோம்; சொல்லாய்நீ
எங்குள்ளாய்?
காடே
இடமாக் கருதிநடம் ஆடுமிறை
ஓடே
கலனாக உண்பலி தேர்ந்துழல்வான்
வீடே
தரவல்ல வீறுடையான் வெங்கணையால்
கூடார்
புரமெய்த குன்றவில்லி தாள்மலரை
வாடாத
மாலைகளால் வாழ்த்தேலோர்
எம்பாவாய்.
நாடே
அறியும் நரைவிடையான் நற்கழலை
நாள்தோறும் ஏத்திடுவேன் நான்
என்றாய்- உலகமே
அறிந்த வெள்விடை-வாகனனான
சிவபெருமானது நல்ல திருவடியைத்
தினந்தோறும் புகழ்ந்து
வழிபடுவேன் நான் என்று (முன்பு
/ நேற்று)
எல்லாரும்
அறியும்படி சொன்னாய்;
("நாடே
அறியும்" என்ற
சொற்றொடரை இப்படி இருவிதமாகவும்
பொருத்திப் பொருள்கொள்ளல்
ஆம்);
நம்பி
வந்தோம் தோடு ஆரும் காது
உடையோம்- அந்தப்
பேச்சை நம்பி நாங்கள் வந்தோம்;
காதில்
தோடு அணிந்தவர்கள் நாங்கள்;
(நம்பிவந்தோம்
= உன்
பேச்சை இதுவரை நம்பிக்கொண்டிருந்தோம்"
என்றும்
பொருள்கொள்ளல் ஆம்);
(தோடு
ஆரும் காது உடையோம் =
நாங்கள்
ஏற்கெனவே காதுகுத்தித் தோடு
அணிந்திருக்கின்றோம்.
"இப்போது
நீ புதிதாகக் காதுகுத்தப்
பார்க்கின்றாயோ?"
என்றும்
தொனிக்கப் பொருள்கொள்ளல்
ஆம்; காதுகுத்துதல்
= வஞ்சித்தல்);
சொல்லாய்
நீ எங்கு உள்ளாய்?
- நீ
எங்கே இருக்கின்றாய்,
சொல்லு!
காடே
இடமாக் கருதி நடம் ஆடும் இறை- சுடுகாடே
திருநடம் செய்யும் இடமாக
விரும்பிக் கூத்தாடும் இறைவன்;
(இடமா
- இடமாக);
(சம்பந்தர்
தேவாரம் - 1.48.5 - "பேயடைந்த
காடிடமாப் பேணுவ தன்றியும்போய்");
மங்கை
ஒரு பங்கு உடையான்-
உமையை
ஒரு பாகமாக உடையவன்;
தெள்ளு-புனல்
கங்கைதனைச் செஞ்சடையில்
தேக்கியவன்- தெளிந்த
நீரை உடைய கங்கையைச் சிவந்த
சடையில் அடைத்தவன்;
கள்ளம்
இலா அன்பர்க்குக் காவலவன்- தூய
மனம் உடைய தொண்டர்களுக்குக்
காவலாக இருப்பவன்;
(காவல்
- பாதுகாப்பு;
காவலவன்
- காப்பவன்;
அரசன்);
(சம்பந்தர்
தேவாரம் - 2.56.11 - "கழுமலத்தார்
காவலவன்");
சீர்தன்னை
உள்ளத்தில் எண்ணி உருகு-
அப்பெருமானது
புகழை உள்ளத்தில் எண்ணி
உருகுவாயாக;
ஏலோர்
எம்பாவாய்- அசைநிலை;
6)
அல்லும்
அகன்ற தடிவானில் செஞ்சுடர்
மெல்ல
எழுந்தது; வெண்முத்துப்
போலொளிரும்
பல்லினளே,
பஞ்சணைக்கே
பற்றுமிக வைத்தாயோ?
சொல்லு;
தெருவினிலுன்
தோழிகள்நாம் காத்துள்ளோம்;
வெல்லரு
மன்மதனை வெண்பொடிசெய்
கண்ணுதலான்,
கல்லொருவில்
ஆக்கிக் கடியரண்மூன் றெய்தபிரான்,
தொல்லைவினை
யெல்லாம் தொலைந்தொழிய ஈசனவன்
நல்லதிரு
நாம(ம்)
நவிற்றேலோர்
எம்பாவாய்.
அல்லும்
அகன்றது- இருள்
நீங்கியது; (அல்
- இருள்);
அடிவானில்
செஞ்சுடர் மெல்ல எழுந்தது- கீழ்வானத்தில்
செஞ்சூரியன் மெல்ல உதித்தது;
("அல்லும்
அகன்ற தடிவானில்"
என்ற
சொற்றொடரில் "அடி"
என்ற
சொல்லை இடைநிலைத்தீவகமாகக்
கொண்டு இருபுறமும் இயைத்துப்
பொருள்கொள்ளல் ஆம்;
= 1. "அல்லும்
அகன்றதடி; வானில்.."
2. "அல்லும்
அகன்றது; அடிவானில்..";
(அடி
- ஒரு
மகடூஉமுன்னிலைச் சொல்;
- ஒரு
பெண்ணை விளிக்கும் சொல்);
வெண்முத்துப்
போல் ஒளிரும் பல்லினளே,
- வெண்முத்துப்போல்
ஒளிவீசும் பற்கள் உடையவளே;
பஞ்சணைக்கே
பற்று மிக வைத்தாயோ?
சொல்லு;
- பஞ்சுமெத்தைக்கே
மிகவும் அன்பு கொண்டாயோ?
சொல்வாயாக;
தெருவினில்
உன் தோழிகள் நாம் காத்துள்ளோம்- வீதியில்
உன் தோழிகளாகிய நாங்கள்
உனக்காகக் காத்திருக்கின்றோம்;
கல்
ஒரு வில் ஆக்கிக் கடி-அரண்
மூன்று எய்த பிரான்-
மேருமலையை
ஒரு வில்லாக ஏந்திக் காவல்
மிக்க முப்புரங்களை எய்த
தலைவன்; (கடி
- காவல்);
தொல்லைவினை
எல்லாம் தொலைந்தொழிய
– பழவினை எல்லாம் அடியோடு
அழியும்படி; (தொல்லை
- பழமை;
துன்பம்);
ஈசன்அவன்
நல்ல திருநாமம் நவிற்று-
ஈசனது
நல்ல திருப்பெயரைச் சொல்வாயாக;
(நவிற்றுதல்
- சொல்லுதல்);
ஏலோர்
எம்பாவாய்- அசைநிலை;
7)
காமரம்
பாடிக் கருவண்டு சூழ்கின்ற
தாமரை
பூத்த தடம்பொய்கைத் தண்ணீரில்
நா(ம்)மகிழ
ஆடி நமது மல(ம்)நீங்க
மாமறைகள்
நாலும் வழுத்திடு(ம்)
மெய்ப்பொருள்
கோமள
வல்லியைக் கூர்வேல்போற்
கண்ணியை
வாம(ம்)
மகிழ்ந்தபிரான்
மாணிக்காக் கூற்றுதைத்தான்
நாமம்
பலவுடைய நம்பெருமான் பாதத்தில்
பாமலர்கள்
இட்டுப் பரவேலோர் எம்பாவாய்.
காமரம்
பாடிக் கருவண்டு சூழ்கின்ற
தாமரை பூத்த தடம்பொய்கைத்
தண்ணீரில்- சீகாமரம்
முதலிய பண்கள் பொருந்தும்
இனிய இசையை எழுப்பிக் கரிய
வண்டுகள் சூழ்கின்ற தாமரைப்பூக்கள்
பூத்த பெரிய பொய்கையின்
குளிர்ந்த நீரில்;
(காமரம்
- இசை;
சீகாமரம்
என்ற பண்);
நாம்
மகிழ ஆடி நமது மலம் நீங்க
– நாம் மகிழுமாறும் நம் மாசுகள்
நீங்குமாறும் குளித்து;
(ஆடுதல்
- குளித்தல்);
தாளை
இறை ஊன்றித் தோள்நெரித்துக் கத்தி
அழவைத்தவனே-
திருப்பாதத்தைச்
சிறிதளவு ஊன்றி அவனது புஜங்களை
நசுக்கி, அவனை
ஓலமிட்டு அழச்செய்தவனே;
கைதொழுது
ஒன்று இரந்தோம்-
உன்னைக்
கைகூப்பி வணங்கி ஒரு வரம்
யாசித்தோம்;
புத்தம்புதிய
மலர்போல் பொலியும் நின்
அடிக்குப் பத்தி உடையாரே எம்
கைத்தலம் பற்றிடுக – மிகப்
புதிய மலர் போன்ற அழகிய உன்
திருவடிக்குப் பக்தி உடைய
அன்பர்களே எம் கணவர்கள் ஆகுக;
நித்தலும்
எம் கைகள் நின் பணியே செய்திடுக
– நாள்தோறும் எங்கள் கைகள்
உன் திருத்தொண்டே செய்யட்டும்;
கைத்த
விடந்தன்னைக் கண்டத்தில்
இட்டவனே- கசந்த
ஆலகாலத்தை உண்டு கண்டத்தில்
வைத்தவனே; (கைத்தல்
- கசத்தல்);
இத்தனையே
வேண்டும் எமக்கு-
இந்த
வரமே எங்களுக்கு வேண்டும்;
பன்றி-உருக்
கொண்டு அகழ்ந்தும்,புள்ளாய்ப்
பறந்து உயர்ந்தும்,சென்ற
– பன்றி வடிவில் அகழ்ந்தும்
அன்னப்பறவை வடியில் உயரப்
பறந்தும் சென்ற;
அரி
வேதன் இவர் தேட அருந்-தீயாகி
நின்றவனே- திருமால்
பிரமன் இவர்கள் தேடிக்காண
அரிய ஜோதியாகி அங்கே வந்து
ஓங்கியவனே; (சென்றவரி
- சென்ற
அரி); (தேடவருந்
தீயாகி = 1. தேட
அருந்-தீ
ஆகி; 2. தேட
வரும் தீ ஆகி);
கண்
திகழும் நெற்றியனே-
நெற்றிக்கண்ணனே;
தில்லைதனுள்
மன்றுதனில் கூத்தாடும் மன்னவனே- தில்லை
அம்பலத்தில் திருநடம் செய்யும்
அரசனே;
பை
திகழும் பாம்பு ஆர்த்தாய்- படம்
உடைய பாம்பை அரைநாணாகக்
கட்டியவனே; (பை
- பாம்பின்
படம்); (ஆர்த்தல்
- கட்டுதல்);
பாசுபதா"என்று
ஏத்திக்- பாசுபதனே"
என்றெல்லாம்
புகழ் பாடி;
கைதொழுது
வாழ்வோம் களித்து-
கைகூப்பி
வணங்கி இன்புற்று வாழ்வோமாக;
ஏலோர்
எம்பாவாய்- அசைநிலை;
11)
பாரினைச்
சூழ்ந்து பரந்து விளங்குகின்ற
வாரிதியின்
நீருண்டு வானெழுந்து மாதேவன்
ஏரிலகு
கண்டநிறம் ஏற்றவன்பூண்
முப்புரிநூல்
நேரொளிர
மின்னிமதில் நீறுசெய்தான்
தன்னகைபோல்
பேரிடி
ஆர்த்துப் பினாகம்போல்
வில்காட்டி
நாரிபங்கன்
நாமமுரை நாவர் மகிழஅவர்
கோரியன
நல்கிக் குறைதீர்க்கும்
நாதனருள்
மாரியெனப்
பெய்யாய் மழையேலோர் எம்பாவாய்.
பாரினைச்
சூழ்ந்து பரந்து விளங்குகின்ற
வாரிதியின் நீர் உண்டு வான்
எழுந்து- உலகத்தைச்
சுற்றிப் பரந்து இருக்கின்ற
கடலின் நீரைப் பருகி வானில்
உயர்ந்து; (வாரிதி
- கடல்);
மாதேவன்
ஏர் இலகு கண்ட நிறம் ஏற்று- மகாதேவனது
அழகிய கண்டத்தின் நிறத்தை
ஏற்று; (ஏர்
- அழகு);
(ஏர்
- அழகு);
(இலகுதல்
- விளங்குதல்);
அவன்
பூண் முப்புரிநூல் நேர் ஒளிர
மின்னி- அவன்
அணிந்த பூணூல் போல ஒளிவீச
மின்னி; (நேர்தல்
- ஒத்தல்);
மதில்
நீறுசெய்தான்-தன்
நகை போல் பேரிடி ஆர்த்துப்- முப்புரங்களைச்
சாம்பலாக்கிய பெருமானது
சிரிப்பினைப் போல் பேரொலியுடைய
இடிகள் முழக்கி;
(அட்டஹாஸம்
- பெருநகை);
(ஆர்த்தல்
- ஒலித்தல்);
பினாகம்போல் வில் காட்டி-
சிவபெருமானது
வில்லான பினாகம் போல் வானவில்
காட்டி;
நாரிபங்கன்
நாமம் உரை நாவர் மகிழ அவர்
கோரியன நல்கிக் குறைதீர்க்கும்- உமைபங்கனது
திருநாமத்தை நாவால் சொல்லும்
பக்தர்கள் மகிழும்படி அவர்கள்
விரும்பிய வரங்களையெல்லாம்
அளித்துக் குறைதீர்க்கின்ற;
நாதன்
அருள் மாரி எனப் பெய்யாய்
மழை- அப்பெருமானது
அருள்மழை போல, மழையே,
நீ
பெய்வாயாக;
ஏலோர்
எம்பாவாய்- அசைநிலை;
12)
ஆற்றைச்
சடைக்கரந்த அண்ணல் அடிபோற்றி
கீற்று
மதிசூடி கேடில் அடிபோற்றி
ஏற்றுக்
கொடியுடைய ஏந்தல் அடிபோற்றி
நீற்றன்
உமைமங்கை நேயன் அடிபோற்றி
தோற்றம்
முடிவில்லாத் தூயன் அடிபோற்றி
காற்றுநீர்
தீவெளிபார் ஆனான் கழல்போற்றி
கூற்றை
உதைசெய்த கூத்தன் கழல்போற்றி
போற்றிநாம்
மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.
ஆற்றைச்
சடைக் கரந்த அண்ணல் அடி போற்றி- கங்கையைச்
சடையில் ஒளித்த பெருமான்
திருவடிக்கு வணக்கம்;
(கரத்தல்
- மறைத்தல்;
ஒளித்தல்);
கீற்று
மதிசூடி கேடு இல் அடி போற்றி- பிறையைச்
சூடியவனது அழிவற்ற திருவடிக்கு
வணக்கம்;
ஏற்றுக்-கொடி
உடைய ஏந்தல் அடி போற்றி-
இடபச்சின்னம்
பொறித்த கொடியை உடைய தலைவனது
திருவடிக்கு வணக்கம்;
தோற்றம்
முடிவு இல்லாத் தூயன் அடி
போற்றி- ஆதியும்
அந்தமும் இல்லாத நின்மலனது
திருவடிக்கு வணக்கம்;
காற்று
நீர் தீ வெளி பார் ஆனான் கழல்
போற்றி- நிலம்
நீர் நெருப்பு காற்று ஆகாயம்
என்ற ஐம்பூதங்கள் ஆனவனது
திருவடிக்கு வணக்கம்;
(யாப்புக்
கருதி ஐம்பூதங்களின் வரிசை
மாறி வந்தது);
O Lord with red
matted locks that have Ganga, Kondrai flowers, Vilvam leaves, a crane
feather (/ a flower called ‘kokkiRagu’), a snake and the moon
close together.
தொல்வினையைத்
தீர்ப்பவனே
tolvinaiyait
tīrppavane
O Lord who destroys
the past karma
என்று
புகழ் பாடி மகிழ்ந்து ஆடு
eṇḍru pugaḻ
pāḍi magiḻndu āḍu
Saying so, let us
sing the praises of Siva and bathe joyously in this lake.
ஏலோர்
எம்பாவாய்
el or em pāvāy
the usual refrain in
Paavai songs.
10)
கைதவமே
நற்றவமாக் கைக்கொண்டு நாள்தோறும்
பொய்களையே
சொல்லியுழல் புல்லர்கட்கு
எட்டாத
செய்யவனே
தில்லைநகர்ச் சிற்றம்பலத்து
ஆடல்
செய்பவனே
மாலையெனச் செத்தார்தம்
என்பணிந்தாய்
நெய்திகழும்
சூலத்தாய் நீள்மதியத்
துண்டத்தாய்
மைதிகழும்
கண்டத்தாய் மார்பினில்-வெண்
ணூலினனே
பைதிகழும்
பாம்பார்த்தாய் பாசுபதா
என்றேத்திக்
கைதொழுது
வாழ்வோம் களித்தேலோர் எம்பாவாய்.
kaidavamē
naṭravamāk kaikkoṇḍu nāḷdōṟum
poygaḷaiyē
solliyuḻal pullargaṭku eṭṭāda
seyyavanē
tillainagarc ciṭrambalattu āḍal
seybavanē
mālaiyenac cettārdam enbaṇindāy
neydigaḻum
sūlattāy nīḷmadiyat tuṇḍattāy
maidigaḻum
kaṇḍattāy mārbinil-veṇ ṇūlinanē
paidigaḻum
pāmbārttāy pāsubadā eṇḍrēttik
kaitoḻudu vāḻvōm
kaḷittēlōr embāvāy.
கைதவமே
நற்றவமாக் கைக்கொண்டு நாள்தோறும்
பொய்களையே சொல்லி உழல்
புல்லர்கட்கு எட்டாத செய்யவனே
O just Lord with a
red form, who cannot be reached by the lowly people who roam about
uttering only falsehood and lies, as if it were a superior penance
தில்லைநகர்ச்
சிற்றம்பலத்து ஆடல் செய்பவனே
tillainagarc
ciṭrambalattu āḍal seybavane
O Lord who performs
the cosmic dance in the hall in the city of Thillai (Chidambaram)
மாலையெனச்
செத்தார்தம் என்பு அணிந்தாய்
mālaiyenac
cettārdam enbu aṇindāy
You wear the bones
of the dead as a garland
நெய்
திகழும் சூலத்தாய்
ney tigaḻum
sūlattāy
You hold the
trident, which has an oily sheen.
நீள்மதியத்
துண்டத்தாய்
nīḷmadiyat
tuṇḍattāy
You wear a long
crescent moon
மை
திகழும் கண்டத்தாய்
mai tigaḻum
kaṇḍattāy
You are the
dark-throated Lord
மார்பினில்
வெண்ணூலினனே
mārbinil
veṇṇūlinane
O Lord who wears the
white sacred thread across Your chest
பை
திகழும் பாம்பு ஆர்த்தாய்
pai tigaḻum pāmbu
ārttāy
You tie the hooded
cobra as a belt
பாசுபதா"
என்று
ஏத்திக்
pāsupadā"
eṇḍru ettik
O Paasupatha! -
Singing such praises of the Lord
கைதொழுது
வாழ்வோம் களித்து
kaitoḻudu vāḻvom
kaḷittu
We will worship Him
with folded hands and live happily
ஏலோர்
எம்பாவாய்
el or em pāvāy
the usual refrain in
Paavai songs.
11)
பாரினைச்
சூழ்ந்து பரந்து விளங்குகின்ற
வாரிதியின்
நீருண்டு வானெழுந்து மாதேவன்
ஏரிலகு
கண்டநிறம் ஏற்றவன்-பூண்
முப்புரிநூல்
நேரொளிர
மின்னி-மதில்
நீறுசெய்தான் தன்னகை-போல்
பேரிடி
ஆர்த்துப் பினாகம்-போல்
வில்-காட்டி
நாரி-பங்கன்
நாமம்-உரை
நாவர் மகிழ-அவர்
கோரியன
நல்கிக் குறை-தீர்க்கும்
நாதனருள்
மாரியெனப்
பெய்யாய் மழையேலோர் எம்பாவாய்.
pārinaic cūḻndu
parandu viḷaṅgugiṇḍra
vāridiyin nīruṇḍu
vāneḻundu mādēvan
ērilagu kaṇḍaniṟam
ēṭravan-pūṇ muppurinūl
nēroḷira
minni-madil nīṟuseydān tannagai-pōl
pēriḍi ārttup
pināgam-pōl vil-kāṭṭi
nāripaṅgan
nāmam-urai nāvar magiḻa-avar
kōriyana nalgik
kuṟai-tīrkkum nādanaruḷ
māriyenap peyyāy
maḻaiyēlōr embāvāy.
பாரினைச்
சூழ்ந்து பரந்து விளங்குகின்ற
வாரிதியின் நீர் உண்டு வான்
எழுந்து
The Lord who bestows
all boons and removes the suffering of devotees who chant the name of
Ardhanareeswara (ardanārīsvarā )
நாதன்
அருள் மாரி எனப் பெய்யாய்
மழை
nādan aruḷ māri
enap peyyāy maḻai
O rain, pour down like that Lord’s
torrential grace!
ஏலோர்
எம்பாவாய்
el or em pāvāy
the usual refrain in
Paavai songs.
12)
ஆற்றைச்
சடைக்கரந்த அண்ணல் அடிபோற்றி
கீற்று
மதிசூடி கேடில் அடிபோற்றி
ஏற்றுக்
கொடியுடைய ஏந்தல் அடி-போற்றி
நீற்றன்
உமைமங்கை நேயன் அடி-போற்றி
தோற்றம்
முடிவில்லாத் தூயன் அடி-போற்றி
காற்றுநீர்
தீவெளிபார் ஆனான் கழல்-போற்றி
கூற்றை
உதைசெய்த கூத்தன் கழல்-போற்றி
போற்றிநாம்
மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.
āṭraic
caḍaikkaranda aṇṇal aḍi-pōṭri
kīṭru madisūḍi
kēḍil aḍi-pōṭri
ēṭruk koḍiyuḍaiya
ēndal aḍi-pōṭri
nīṭran umaimaṅgai
nēyan aḍi-pōṭri
tōṭram muḍivillāt
tūyan aḍi-pōṭri
kāṭrunīr
tīveḷipār ānān kaḻal-pōṭri
kūṭrai udaiseyda
kūttan kaḻal-pōṭri
pōṭrinām
mārgaḻinīr āḍēlōr embāvāy.
ஆற்றைச்
சடைக் கரந்த அண்ணல் அடி போற்றி
āṭraic caḍaik
karanda aṇṇal aḍi poṭri
Glory to the holy feet of the
Lord who conceals Ganga in His matted locks.
கீற்று
மதிசூடி கேடு இல் அடி போற்றி
kīṭru madisūḍi
keḍu il aḍi poṭri
Glory to the indestructible and eternal
feet of the Lord who wears a sliver of the moon.
ஏற்றுக்-கொடி
உடைய ஏந்தல் அடி போற்றி
eṭruk-koḍi
uḍaiya endal aḍi poṭri
Glory to the holy feet of the King
whose flag bears the bull as its emblem.
நீற்றன்
உமைமங்கை நேயன் அடி போற்றி
nīṭran umaimaṅgai
neyan aḍi poṭri
Glory to the holy feet of the Lord who
smears the sacred ash and is the beloved of Uma.
தோற்றம்
முடிவு இல்லாத் தூயன் அடி
போற்றி
toṭram muḍivu
illāt tūyan aḍi poṭri
Glory to the holy feet of the pure
Lord who has neither beginning nor end.
காற்று
நீர் தீ வெளி பார் ஆனான் கழல்
போற்றி
kāṭru nīr tī
veḷi pār ānān kaḻal poṭri
Glory to the holy feet of the
Lord who appears as the five elements – air, water, fire, space and
earth.
கூற்றை
உதைசெய்த கூத்தன் கழல் போற்றி
kūṭrai udaiseyda
kūttan kaḻal poṭri
Glory to the holy feet of Lord who is
the cosmic dancer, Nataraja and the One who kicked and destroyed
Yama, the lord of death.
போற்றி
நாம் மார்கழிநீர் ஆடு
poṭri nām
mārgaḻinīr āḍu
Let us sing the glories of His feet like
this many times, and bathe during the month of Margazhi