06.03 – மடக்கு
2009-12-30
6.3.45) இழுக்குமொழி - நஞ்சுகந்தான் - மடக்கு
--------------
இழுக்குமொழி
பேசுவிழிப் பெண்களையும்,
என்றும்
இழுக்குமொழி
சொல்வோர்கூட் டென்னும் -
இழுக்குமொழி
நஞ்சுகந்தான்
தாளிணையை நாளும்
தொழுநிலைக்கும்
நஞ்சுகந்தான்
தீரும் நலிவு.
பதம்
பிரித்து:
இழுக்கும்
மொழி பேசு விழிப் பெண்களையும்,
என்றும்
இழுக்கு-மொழி
சொல்வோர் கூட்டு என்னும் -
இழுக்கும்
ஒழி;
நஞ்சு
உகந்தான் தாளிணையை நாளும்
தொழு; நிலைக்கும்
நம்
சுகம் தான்; தீரும்
நலிவு.
இழுக்குமொழி
- 1. இழுக்கும்
மொழி (ஈர்க்கின்ற
மொழி); 2. இழுக்கு
மொழி (வழு/குற்றம்
உடைய சொற்கள்); 3.
இழுக்கும்
ஒழி (குற்றத்தையும்
நீங்கு);
கூட்டு
- உறவு;
சினேகம்;
நஞ்சுகந்தான்
- 1. நஞ்சு
உகந்தான் (ஆலகால
விஷத்தை விரும்பிய சிவபெருமான்);
2. நம்
சுகம் தான்;
நலிவு
- துன்பம்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment