2014-10-17
V.060 - செல்லும் இடமறியேன் - தனிப்பாடல்
----------------
(வெண்பா)
செல்லும் இடமறியேன்; செல்லும் தடமறியேன்;
அல்லும் பகலுமுன்பேர் அன்போடு - சொல்லும்
குணமறியேன்; பத்தர் கணமறியேன்; கூடும்
வணமறியேன்; சங்கரகா வந்து.
சென்றடையும் இடத்தை அறியமாட்டேன்; செல்லவேண்டிய வழியை அறியமாட்டேன்; இரவும் பகலும் உன் திருநாமத்தைப் பக்தியோடு சொல்லும் குணத்தை அறியமாட்டேன்; அடியார் திருக்கூட்டத்தையும் அறியமாட்டேன்; அவர்களைக் கூடும் வகையையும் அறியமாட்டேன்; சங்கரனே, நீயே இரக்கத்தோடு வந்து என்னைக் காத்தருள்க!
தடம் - வழி; பாதை;
பத்தர்-கணம் - அடியவர் திருக்கூட்டம்;
வண்ணம் - வகை - Way, manner, method;
வி. சுப்பிரமணியன்
----------- --------------